அமீரக செய்திகள்

UAE: புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு திரும்பும் வழியில் நேர்ந்த சோகம்!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக பலி….

துபாயின் ஹத்தாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு திரும்பும் வழியில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அஜ்மான் எமிரேட்டின் மஸ்ஃபவுட் பகுதியில் உள்ள அல் வதன் தெருவில் நடந்த இந்த விபத்தில் ஒரு எமிராட்டி தம்பதிகள், அவர்களின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகள் பலியானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எமிராட்டி குடும்பத்தின் வாகனம் டிரக் மீது மோதியதால் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் அதே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறிய அதிகாரிகள், அவர்களை மஸ்ஃபோட்டில் உள்ள ஷேக் கலீஃபா மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியான செய்திகளின்படி, எமிராட்டி குடும்பத்தினர் புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக துபாய் எமிரேட்டில் உள்ள ஹட்டா நகருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ஜனவரி 1, திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் அல் வதன் தெருவில் கடுமையான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து செயல்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததும், காவல்துறை, சிவில் பாதுகாப்பு மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அஜ்மான் காவல்துறை ஜெனரல் கமாண்ட் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஒட்டியதன் விளைவாக வாகனம் டிரக்கின் பின்புறத்தில் மோதியதும், சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அபுத்பாயில் வசித்து வந்த அந்த குடும்பத்தினரின் உடல்கள் திங்கள்கிழமை இரவு பனி யாஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்த அஜ்மான் காவல்துறை, சாலைகளில் வேக வரம்புகளை கடைபிடிக்கவும் மற்றும் வாகனம் ஓட்டும்போது கவனம் செலுத்தவும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!