அமீரக செய்திகள்

புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் தனி ஆளாக நின்று சாகசம் படைத்த பெண்..!! காரணம் இதுதான்..!!

உலகில் யாருமே எண்ணிப் பார்த்திராத, இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ற அளவிற்கு தோன்றக்கூடிய நிகழ்வுகளையும் சாகசங்களையும் நம் கண் முன்னே காட்சிப்படுத்துவதில் ஐக்கிய அரபு அமீரகம் மற்ற உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்கிறது. அந்த வரிசையில் தற்பொழுது புதியதோர் சாகச நிகழ்வானது இடம்பெற்றுள்ளது.

வீட்டு மொட்டை மாடியில் நின்றுகொண்டு கீழே பார்ப்பதற்குக் கூட நம்மில் பலருக்கு பயம் உண்டு. இதில், 163 தளங்களைக் கொண்டிருக்கும் 828 மீ உயரமான கட்டிடத்தின் உச்சி விளிம்பில் தனி ஆளாக நிற்க சொன்னால்.. நினைத்துக்கூடப் பார்க்க முடியாது அல்லவா.. ஆனால் அதையும் செய்து சாதித்திருக்கிறார் பெண் ஒருவர். ஆச்சரியம்தான்.

உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீஃபாவின் மேல் எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் நிற்கும்படியாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து அது உண்மையாகவே கட்டிடத்தின் உச்சியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோதான் என்று அதன் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ், ஐக்கிய அரபு அமீரக அரசானது இங்கிலாந்தை கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் என பட்டியலிடப்படும் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வீடியோவை வெளியிட்டது.

இந்த வீடியோவில் விமானத்தின் விமான உதவியாளராக உடையணிந்த பெண் ஒருவர் கார்டுகளை ஒவ்வொன்றாக காட்டுகிறார்.  

பின்னர் அந்த பெண் நிற்கக்கூடிய உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் மேல் விமான பணிப்பெண் நிற்பதை வீடியோ காட்டுகிறது.

இந்த வீடியோவில் வந்த விமான உதவியாளர், உண்மையில், நிக்கோல் ஸ்மித்-லுட்விக் என்பவர் ஆவார். அவர் தன்னை உலகப் பயணி, ஸ்கைடைவர், யோகா பயிற்றுவிப்பாளர், மலையேறுபவர், சாகசக்காரர் என்று கூறுகிறார்.

தற்பொழுது புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் நின்றது குறித்து கூறும் போது, “இது சந்தேகத்திற்கு இடமின்றி, நான் செய்த மிக அற்புதமான சாகசங்களில் ஒன்றாகும்” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ரிக்கிங், ஆட்டோமேஷனில் சிறந்து விளங்குவதாக தன்னைக் கூறும் TECS நிகழ்வு சேவைகள் நிறுவனம் இந்த சாகசத்தை மிகவும் உண்மையானது என்று விவரித்துள்ளது.

மேலும், “இது போன்ற ஒரு சிறப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்குக் காரணம் இதை உண்மையாக செய்ய முடியும் என்பதற்காக மட்டுமல்ல, துபாயிலும் இங்கிலாந்திலும் பிரிந்திருந்த குடும்பங்களையும் நினைவில் வைத்ததுத்தான். இது கண்டிப்பாக நாம் நினைவில் வைத்திருக்கும் திட்டம் ”என்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.

இந்த சாகசத்தை மேற்கொண்ட அணியின் ஒரு பகுதியாக இருந்த ஷேன் மேனிங் என்பவர், தானும் நிக்கோலும் இந்த நிகழ்விற்காக அங்கு பல மணிநேரம் நின்றதாக கூறியுள்ளார்.

இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!