அமீரக செய்திகள்

துபாய் காவல்துறையின் விவேகமான நடவடிக்கை!! அரை மணி நேரத்தில் தொலைத்த 76,000 திர்ஹம்ஸ் பணத்தை மீட்டுக் கொடுத்த காவல்துறை…

துபாயில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது சுமார் 76,000 திர்ஹம்ஸுக்கு மேல் பணத்தை தொலைத்த சுற்றுலாப் பயணி ஒருவரின் பணத்தை துபாய் காவல்துறை அரை மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்து அசத்தியுள்ள சம்பவம் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இது தொடர்பாக துபாய் காவல்துறை வெளியிட்ட தகவலின் படி, புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத்  திரும்பும் போது டாக்ஸியில் அந்நபர் பணத்தை தொலைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தொலைத்த பர்ஸைப் பற்றி அதிகாரி ஒருவருக்கு அழைப்பு மூலம் தெரிவித்துள்ளார். இந்த புகாரை துபாய் போலீஸ் செயலியில் உள்ள துபாய் போலீஸ் டூரிஸ்ட் சர்வீஸ் மூலம் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து விரைந்த போலீஸ் குழு உடனடியாக டாக்ஸியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டதாகவும், சில நிமிடங்களில் சுற்றுலாப் பயணியை அழைத்துச் சென்ற டாக்ஸியை கண்டுபிடித்து, பணத்தைத் திருப்பித் தருமாறு ஓட்டுநரை தொடர்பு கொண்டதாகவும் பொது குற்றப் புலனாய்வுத் துறையின் துபாய் சுற்றுலா காவல்துறையின் இயக்குநர் பிரிகேடியர் கல்பான் ஒபைத் அல் ஜல்லாஃப் விவரித்துள்ளார்.

மேலும், டாக்ஸி ஓட்டுநர் நேர்மையாக பணத்தைப் பாதுகாப்பாக திருப்பிக் கொடுத்த அதேவேளையில், சுற்றுலாப் பயணிகளுக்கு பணத்தை மீட்டுத் திருப்பித் தருவதில் அதிகாரிகளுக்கு உதவியதற்காக ஜல்லாஃப் அவரைப் பாராட்டியுள்ளார்.

அதேபோல், பணப் பையையும் முழுத் தொகையையும் மீட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சுற்றுலாப்பயணி, தனது புகாருக்கு உடனடியாக பதிலளித்த துபாய் காவல்துறைக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

 

Related Articles

Back to top button
error: Content is protected !!