அமீரக செய்திகள்
UAE: கட்டுமானத்தில் உள்ள 45 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!!
ஷார்ஜாவில் கட்டுமானத்தில் உள்ள 45 மாடி கட்டிடம் ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஷார்ஜாவின் அல் தாவூன் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஷார்ஜா எக்ஸ்போவின் பின்னால் தற்போது கட்டுமானத்தில் உள்ள பல மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் புகை மற்றும் தீப்பிழம்புகள் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஷார்ஜா சிவில் பாதுகாப்புத் துறையின் மூலம், இந்த தீயானது விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.