அமீரக செய்திகள்

துபாய் டாக்ஸியின் புதிய சேவை: மாற்றுத்திறனாளிகளுக்கு 50% தள்ளுபடி அறிவிப்பு…

துபாய் டாக்ஸி கம்பெனி (Dubai Taxi Company-DTC) மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கில் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மாற்றுத்திறனாளிகள், DTC ஆப் மூலம் வழக்கமான டாக்சிகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.

எனவே, சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு டாக்ஸிகள் தேவைப்படாத நபர்கள் இந்த வழக்கமான டாக்ஸிகளில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வழங்கப்படும் அதே 50 சதவீத தள்ளுபடியை பயனர்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் ‘Sanad’ கார்டு வைத்திருக்கும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு அணுகக்கூடிய வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் அவர்கள் இந்த சேவையை திறமையாகவும் எலெக்ட்ரானிக் ரீதியாகவும் பயன்படுத்த முடியும்.

இது குறித்து DTCயின் தலைமை வணிக மாற்று அதிகாரி அப்துல்லா இப்ராஹிம் அல் மீர் என்பவர் கூறுகையில், “வாடிக்கையாளர்களின் குறிப்பாக மாற்றுத்திறனாளி மக்கள் மத்தியில் திருப்தியை மேம்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

DTC எப்போதும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு உயர்மட்ட போக்குவரத்து சேவைகளை வழங்கவும், துபாயின் நற்பெயருக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவும் பாடுபடுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளி நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டாக்ஸிகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அல் மீர், டிஜிட்டல் சேவையின் துவக்கமானது, நவீன மற்றும் திறமையான முறைகளைப் பயன்படுத்தி இந்த குழுவிற்கான போக்குவரத்து சேவைகளை வழங்குவதை விரிவுபடுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதி என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, இந்தச் சேவையானது, குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட மாற்றுத்திறனாளிகள் வழக்கமான டாக்ஸி சேவைகளை வசதியாகவும் விரைவாகவும் அணுகுவதை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!