அமீரக செய்திகள்

UAE: வெளிநாட்டவர்களுக்கு பறிபோகும் வேலை வாய்ப்பு.. 12,000 நிறுவனங்களில் எமிராட்டிகளை பணியமர்த்துவது கட்டாயம்.. மீறினால் 96,000 திர்ஹம்ஸ் அபராதம்….

ஐக்கிய அரபு அமீரகத்தில் எமிராட்டிசேஷன் திட்டத்தின் மூலம், அமீரக நாட்டு குடிமக்களை பணியமர்த்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது கடந்த இரண்டு வருடங்களாக குறிப்பிட்ட அளவிற்கு மேல் எண்ணிக்கை கொண்ட நிறுவனங்களில் எமிராட்டிகளை கட்டாயம் பணியமர்த்த வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் எமிராட்டிகளை பணியமர்த்துவதற்கான சதவிகிதம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், இப்போது ஏராளமான நிறுவனங்களுக்கு எமிராட்டிசேஷன் திட்டத்திற்கான இலக்கு விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, 20-49 பணியாளர்களைக் கொண்ட 12,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 2024 இல் குறைந்தபட்சம் ஒரு எமிராட்டி பணியாளரையும், 2025 இல் மற்றொரு எமிராட்டியையும் பணியமர்த்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அமைச்சகத்தின் விதிகளின் படி, 2024 இல் நியமிக்கப்படாத ஒவ்வொரு அமீரக குடிமகனுக்கும் 96,000 திர்ஹம்ஸ் வீதம் இந்த நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் மற்றும் அபராதம் ஜனவரி 2025 முதல் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2025-ல் இலக்குகளை அடையத் தவறும் நிறுவனங்களுக்கு 108,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஜனவரி 2026 இல் இந்த அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இலக்குகளை அடைய போதுமான நேரம் வழங்கப்படும் என்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (Mohre) அதன் டிஜிட்டல் அமைப்பு மூலம் நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு, நிதி மற்றும் காப்பீடு, ரியல் எஸ்டேட், தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள், கல்வி, சுகாதார மற்றும் சமூக பணி, கலை மற்றும் பொழுதுபோக்கு, சுரங்கம் மற்றும் குவாரி, மாற்றும் தொழில்கள், கட்டுமானம், மொத்த மற்றும் சில்லறை விற்பனை, போக்குவரத்து மற்றும் கிடங்கு மற்றும் தங்குமிடம் மற்றும் விருந்தோம்பல் போன்ற 14 குறிப்பிட்ட பொருளாதாரத் துறைகளில் இயங்குவதாகவும் கூறப்படுகிறது.

இவை அனைத்தும் தற்போது விரைவான வளர்ச்சியில் இருக்கும் துறைகள் மற்றும் வேலைகள் மற்றும் பொருத்தமான பணிச்சூழலை வழங்குவதற்கான திறனைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எமிராட்டிசேஷன் இலக்குகளை விரைவாக அடையவும், ஆண்டு இறுதி வரை தாமதப்படுத்துவதைத் தவிர்க்கவும் முடிவு செய்துள்ள நிறுவனங்களுக்கென வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் திட்டம் வழங்கும் ஆதரவிலிருந்து பயனடைய இலக்கு நிறுவனங்கள் Nafis தளத்தில் பதிவு செய்வது மிகவும் முக்கியமானது என்று அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, நஃபிஸ் தளம் வழங்கும் ஆதரவிலிருந்து எவ்வாறு பயனடைவது என்பதை அறிவுறுத்துவதோடு, தேவையான இலக்குகளை அடைய பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி நிறுவனங்களுக்கு கல்வி கற்பதற்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

எமிராட்டிசேஷன் முயற்சியானது, முதன் முதலில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களின் திறமையான வேலைகளில் வருடத்திற்கு 2 சதவீத எமிராட்டிகளை பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!