அமீரக செய்திகள்

UAE: இந்தியா, இஸ்ரேல், அமீரகம், அமெரிக்க கலந்துகொள்ளும் I2U2 மாநாடு.. காணொலி வாயிலாக பங்கேற்கும் அதிபர் ஷேக் முஹம்மது பின் சயித் அல் நஹ்யான்..!

முதலாவது இந்தியாஇஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா (I2U2) காணொலி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் யாகிர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது முஹம்மது பின் சயித் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

இம்மாநாட்டில் I2U2 வகுத்துள்ள வரம்பிற்குள் மேற்கொள்ளக்கூடிய திட்டப் பணிகள் மற்றும் உறுப்பு நாடுகளின் பொதுவான நலத்திட்டப் பணிகள் மற்றும் உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

I2U2 கூட்டமைப்பின் முக்கிய அம்சமாக 6 முக்கிய துறைகளளுக்கு பலனளிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம் மற்றும் உணவுபாதுகாப்பு ஆகிய துறைகள் கண்டறியப்பட்டு இத்துறைகளில் தனியார் முதலீடுமற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்வது குறித்தும் ஆராயப்படுகிறது. கட்டமைப்பு மேம்பாடு, தொழிற்சாலைகளில் வாயுவெளியேற்றத்தைக் குறைப்பதற்காக நவீன தொழில்நுட்ப பகிர்வு மற்றும் பசுமை தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்வது என முடிவுசெய்யப்பட்டது. எனவே இதன் அடிப்படையில் தலைவர்களின் ஆலோசனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!