அமீரக செய்திகள்

அமீரகத்தில் நடைபெற்று வரும் பேரிட்சம்பழம் திருவிழாவில் அலைமோதும் கூட்டம்..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் அல் தைத் பேரித்தம்பழம் விழாவில் 50-க்கும் மேற்பட்ட வகையான பேரிச்சம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் 3 அங்குல அளவு மற்றும் ஒன்றரை அங்குலம் கொண்ட பேரிச்சம்பழங்கள் நிகழ்ச்சியில் சிறப்பம்சங்களாக உள்ளன. மேலும் வெவ்வேறு அளவுகளில் உள்ள பேரிச்சம்பழங்களும் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஆராய்ச்சியாளரும் பனை வளர்ப்பு ஆர்வலருமான டாக்டர் ரஷித் மஸ்ரூய் கூறுகையில், “அத்தகைய பேரிச்சம்பழங்களை பயிரிட அதிக முயற்சி எடுக்க வேண்டும். கலப்பின பேரிச்சம்பழங்கள் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். ஷார்ஜா சேம்பர்ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவின் 6வது பதிப்பு ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் ஜூலை 24 வரை நடைபெற உள்ளதுஎன்றார்.

இந்த விழாவின் அனைத்து பதிப்புகளிலும் பங்கேற்றுள்ள கம்ருல் ஹுசைன், பார்வையாளர்களிக்கு சிறந்த தரமான பேரீச்சம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.  நாங்கள் பல்வேறு வகையான பேரிச்சம்பழங்களை விற்பனை செய்கிறோம், வரும் நாட்களில் அதன் ரகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்விழாவில் கிட்டத்தட்ட 200 கிலோ பேரிச்சம்பழங்களை விற்பனை செய்துள்ளோம்என்றார் ஹுசைன்.

Related Articles

Back to top button
error: Content is protected !!