அமீரக செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சரானது அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம்….

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான Etihad Airways, வியாழன் அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில், அணியின் அதிகாரிகள் மற்றும் CSK வீரர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், எதிஹாட் கேபின் குழுவினருடன் மேடையில் அவர்கள் தங்கள் புதிய ஜெர்சியை அணிந்து விமான நிறுவனத்தின் லோகோவை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய எதிஹாட் ஏர்வேஸின் தலைமை வருவாய் அதிகாரி அரிக் டி, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிஹாட் நிறுவனத்தின் விளையாட்டுத் துறைக்கு வரவேற்கும் வகையில் இன்று ஒரு அசாதாரண பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. கிரிக்கெட்டின் உலகளாவிய அதிர்வு பல்வேறு சமூகங்களை ஒன்றிணைப்பதுடன் எதிஹாட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் பகிரப்பட்ட மதிப்புகளைப் பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், இந்த கூட்டாண்மை ஸ்பான்சர்ஷிப்பிற்கு அப்பாற்பட்டது என்று கூறிய டி, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பயணிகளுக்கு மறக்க முடியாத தருணங்களை உருவாக்குவதுடன் எல்லைகளைக் கடந்து விளையாட்டின் உத்வேகத்தை உயர்த்தும் சக்திவாய்ந்த தொடர்பை உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய CSK நிர்வாகத்தின் CEO காசி விஸ்வநாதன், புதிய கூட்டாண்மை கிரிக்கெட் சீசன் முழுவதும் உற்சாகமான முயற்சிகள், ஈடுபாடு கொண்ட செயல்பாடுகள் மற்றும் தனித்துவமான ரசிகர் அனுபவங்களை உறுதியளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பத்து நகரங்களுக்கு மொத்தம் 165 வாராந்திர விமானங்களை எதிஹாட் இயக்குகிறது, இது இந்திய பயணிகளை உலகளவில் 70 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!