குவைத்: இனி ஃபேமிலி விசிட் விசாவில் வருபவர்கள் இந்த இரண்டு விமானத்திலேயே பயணிக்க வேண்டும்.. மீறினால் திருப்பியனுப்பப்படுவர்… புதிய சட்டம் அமல்..!!
குவைத்திற்கு ஃபேமிலி விசிட் விசா மூலம் தங்கள் குடும்பத்தை அழைத்து வரவோ அல்லது வெளியேறவோ விரும்பும் வெளிநாட்டவர்கள் குறிப்பிட்ட விமான நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக வெளியான செய்திகளின் படி, குவைத் விமானப் போக்குவரத்துக்கான குவைத் தலைமை இயக்குநரகம் (DGCA) ஃபேமிலி விசா வைத்திருப்பவர்கள் குவைத் விமான நிறுவனங்களான குவைத் ஏர்வேஸ் மற்றும் அல் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவற்றில் குவைத்திற்கு வந்து செல்வதற்கும் புறப்படுவதற்கும் மட்டுமே அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நியமிக்கப்பட்ட இந்த விமான நிறுவனங்களை தவிர பிற விமான நிறுவனங்களைப் பயன்படுத்தும் ஃபேமிலி விசிட் விசா வைத்திருப்பவர் புறப்படும் இடத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று DGA எச்சரிக்கை விடுத்துள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இந்த மாத தொடக்கத்தில், குவைத் அரசாங்கம், புதிய விதிமுறைகளின் கீழ் குடும்பம், வணிகம் மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக விசிட் விசாக்களை வழங்குவதை மீண்டும் தொடங்குவதாக அறிவித்திருந்தது.
குடும்ப விசா வழங்குவது தொடர்பான குவைத்தின் புதிய விதிமுறைகளின் கீழ், பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் போன்ற முதல்-நிலை உறவினர்களுக்கு ஸ்பான்சர் செய்வதற்கு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 400 குவைத் தினார் (Dh4,775) மற்றும் பிற உறவினர்களுக்கு 800 குவைத் தினார் சம்பாதிக்க வேண்டும்.
மேலும், ஒரு குடும்ப விசிட் விசா வைத்திருப்பவர் தங்குவதற்கான காலம் அதிகபட்சமாக ஒரு மாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக அந்த விசா ரெசிடென்சி அனுமதிகளாக மாற்றப்படாது என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழிக்குப் பிறகு வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, விசா தங்கும் காலத்தை கடைபிடிக்கும் பார்வையாளர்களுக்கு தனியார் மற்றும் அரசு சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், சுமார் 4.6 மில்லியன் வெளிநாட்டினரைக் கொண்ட குவைத், பார்வையாளர்கள் தங்கள் விசாக்கள் காலாவதியானதும் வெளியேறுவதை உறுதிசெய்ய கடுமையான விதிகளை அமைத்து நிலுவையில் உள்ள குடும்ப வருகை விசாக்களை நிறுத்தியது. பின்னர், ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகளுக்கான சார்பு விசாக்களை மீண்டும் வழங்க அனுமதிக்கும் வகையில் இந்த அமைப்பு பகுதியளவில் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel