அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்றும் தொடரும் தொலைதூர வேலை.. தனியார் துறை நிறுவனங்களுக்கு அமைச்சகம் வேண்டுகோள்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், இன்றும் (பிப்ரவரி 13 ஆம் தேதி) தொலைதூர பணிகளைத் தொடருமாறு தனியார் துறை நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் (MoHRE) மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் திங்கள்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பில் “வெளிப்புற வேலைகளை மீண்டும் தொடங்குவதற்கு அவசியமானால், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்க, நிறுவனங்களால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் “வெளிப்புற வேலை இடங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பையும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அமீரகத்தில் நிலவி வந்த மோசமான வானிலையாலும் தொடர்ந்து பெய்த கனமழையாலும் நேற்று (திங்கள்கிழமை) வீட்டில் இருந்த படியே ஊழியர்கள் வேலை செய்ய தனியார் துறை நிறுவனங்களுக்கு அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது. இருந்தபோதிலும் பல தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சென்றே பணிபுரிந்து வந்தனர் என்பது குறப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!