அமீரக செய்திகள்

பயணிகளின் வசதிக்காக துபாயில் புதிய ‘சிட்டி செக்-இன்’ வசதியை திறந்த ஏர் அரேபியா..!! எங்கு தெரியுமா..??

ஷார்ஜாவை தலைமையிடமாக கொண்ட பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் அரேபியா, புதிதாக சிட்டி செக்-இன் சேவையை துபாயில் திறந்து வைத்துள்ளது. அல் ஃபஹிதி (Al Fahidi) பகுதியில் உள்ள சிட்டி சென்டர் அல் ஷிந்தகாவில் (City Centre Al Shindagha) அமைந்துள்ள இந்த சிட்டி செக்-இன் மையம், தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

எனவே, துபாயிலிருந்து ஷார்ஜா வழியாக ஏர் அரேபியாவில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் பேக்கேஜ் அலோவன்ஸ்களை வாங்க, விருப்பமான இருக்கைகளைத் தேர்ந்தெடுக்க அல்லது தங்கள் விமானத் திட்டங்களைச் சரிசெய்ய இந்த சிட்டி செக்-இன் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

துபாயில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய வசதியின் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் சிட்டி செக்-இன் வசதிகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இது பயணிகளுக்கு அதிக வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் ஒரு சிறந்த சேவையாகும்.

ஏர் அரேபியாவின் வாடிக்கையாளர்கள் இந்த புதிய சேவையின் மூலம், தங்கள் விமானங்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பும், திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன்பும் தங்கள் லக்கேஜ்களை இங்கே இறக்கிவிட்டு, தங்கள் பயணத்திற்கான போர்டிங் பாஸைப் பெறலாம்.

மேலும், விமானத்திற்கு முந்தைய செயல்முறையை எளிதாக முடிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், விமான நிலையக் காத்திருப்புகளை நீக்கவும், பயணிகள் விமான நிலையத்திற்கு வந்ததும் நேராக விமானத்திற்குச் செல்லவும் சிட்டி செக்-இன் சேவை பயணிகளை அனுமதிக்கிறது.

அதுமட்டுமில்லாமல், தற்போது துபாயில் திறக்கப்பட்டுள்ள இந்த ஷிண்டகா சிட்டி சென்டர் சிட்டி செக்-இன் வசதியை ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் புதிய பேருந்து சேவையும் விரைவில் செயல்படத் தொடங்கும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!