அமீரக செய்திகள்

ரமலான் மாதத்தில் துபாய், ஷார்ஜா, அபுதாபியில் கட்டண பார்க்கிங் செயல்படும் நேரங்கள் வெளியீடு..!!

அமீரகத்தில் புனித மாதம் தொடங்கியதை முன்னிட்டு, நோன்பு இருப்பவர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க பல அறிவிப்புகளை அமீரக அரசு அறிவித்துள்ளது. ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைப்பதில் இருந்து 9 அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகளும் அதில் அடங்கும்.

அந்த வகையில், ரமலானை முன்னிட்டு ‘தராவீஹ்’ எனும் சிறப்பு தொழுகையில் கலந்து கொள்பவர்களுக்கு இடமளிக்கும் வகையில், அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று எமிரேட்களில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் செலுத்தும் நேரமும் மாறுபடும். அது பற்றிய விமரங்களை கீழே காணலாம்.

துபாய்

துபாயில் பொது பார்க்கிங்கிற்கு, திங்கள் முதல் சனிக்கிழமை வரை அனைத்து மண்டலங்களுக்கும் கட்டணங்கள் பொருந்தும். பார்க்கிங் கட்டணம் செலுத்தப்படும் இரண்டு பகுதி நேரங்கள் கீழே உள்ளன:

  • முதல் பகுதி: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
  • இரண்டாவது பகுதி: இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை

எனவே, துபாயில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பொது பார்க்கிங் இலவசம். எவ்வாறாயினும், பல மாடி கார் பார்க்கிங் 24/7 செயல்படும். மேலும், TECOM பார்க்கிங் மண்டலத்திற்கு (F) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டணம் விதிக்கப்படும்.

ஷார்ஜா

சனிக்கிழமை முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை பொது பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும். நீல மண்டலங்களை (Blue Zone) தவிர மற்ற இடங்களில் வெள்ளிக்கிழமைகளில் பார்க்கிங் இலவசம்.

அபுதாபி

அபுதாபியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை என எவ்வித மாற்றமுமின்றி கட்டண பார்க்கிங் செயல்படும். அதேநேரத்தில், வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை பொது பார்க்கிங் இலவசம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!