அமீரக செய்திகள்

பயணத்தை எளிதாக்க துபாய் மற்றும் அபுதாபியில் ‘ஹோம் செக்-இன்’ சேவையை வழங்கும் விமான நிறுவனங்கள்.. எப்படி பெறுவது..?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் தடையின்றி பயணிக்க விரும்புகிறீர்களா? உங்கள் பயணத்தை எளிதாகவும், வசதியானதாகவும் மாற்ற சில விமான நிறுவனங்களால் ‘ஹோம் செக்-இன்’ வசதி வழங்கப்படுகிறது. பயணிகள் தங்களின் வீட்டிலிருந்தே பயண நடைமுறைகளை முடிக்க உதவும் இந்த வசதியை வழங்கும் விமான நிறுவனங்கள் பற்றிய விபரங்களை இங்கே காணலாம்.

அமீரகத்தில் தற்பொழுது, ஃப்ளை துபாய், எமிரேட்ஸ், சவுதியா மற்றும் குவைத் ஏர்வேஸ் ஆகிய நான்கு விமான நிறுவனங்கள் மட்டுமே துபாயில் இந்த சேவையை வழங்குகின்றன. இந்த சேவையானது dnata மூலம் இயங்கும் ‘Dubz’ மூலம் வழங்கப்படுகிறது. அதேபோன்று அபுதாபியிலும் இந்த ஹோம் செக்-இன் சேவை எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. அதனை எவ்வாறு பெறலாம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துபாய்:

1. ‘Dubz.com’ இணையதளம் அல்லது நீங்கள் பயணிக்கவுள்ள விமான நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்லவும்.

2. Dubz.com இல், ‘flying out of Dubai’ என்பதைத் தேர்வு செய்து, கீழ்வரும் மெனுவிலிருந்து நீங்கள் பயணிக்கும் விமானத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ‘Book Now’ என்பதைக் கிளிக் செய்யவும்.

3. இப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேக்கேஜ்களின் விருப்பங்கள் தோன்றும்:

  • ஹோம் செக்-இன் – 279 திர்ஹம்ஸ்
  • ஹோம் செக்-இன் மற்றும் லேண்ட் & லீவ் பண்டல் (Leave bundle) – 399 திர்ஹம்ஸ்
  • கூடுதல் அனுபவம் – 549 திர்ஹம்ஸ்

4. உங்கள் தேவைக்கு ஏற்றார் போல, உங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்பு ‘select’ என்பதனை கிளிக் செய்தவுடன் நீங்கள் மற்றொரு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

5. மேலும், இந்தப் பக்கத்தில் பணம் செலுத்தும் முன் உங்கள் தேர்வில் கூடுதல் அம்சங்களை சேர்த்துக் கொள்ளும் விருப்பமும் வழங்கப்படும். நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய கூடுதல் அம்சங்கள்:

  • கூடுதல் லக்கேஜ்கள் (4 லக்கேஜ்களுக்கு மேல் இருந்தால்)
  • கூடுதல் ஃபாஸ்ட் டிராக் பாஸ்

6. அடுத்த படியாக, ‘next’ என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்கள் விமான விவரங்களை நிரப்பும்படி கேட்கப்படுவீர்கள், தொடர்ந்து உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தி Dubz கணக்கில் பதிவு செய்யும்படி கேட்கப்படுவீர்கள்.

7. இறுதியாக, நீங்கள் பதிவு செய்த பிறகு, பணம் செலுத்தி சிரமமின்றி நீங்கள் செல்ல வேண்டிய நாட்டிற்கு பயணிக்கலாம்.

முதல் வகுப்பில் பறக்கும் எமிரேட்ஸ் பயணிகளுக்கு இந்த சேவை இலவசமாக ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலவச ஹோம் செக்-இன் சேவையை முன்பதிவு செய்ய, பயணிகள் எமிரேட்ஸ் இணையதளத்திற்குச் சென்று, ‘ஹோம் செக்-இன் மற்றும் லேண்ட் & லீவ்’ பக்கத்தில் உள்ள ‘Book complimentary Home check-in’ என்பதை கிளிக் செய்து பயன் பெறலாம்.

அபுதாபி:

துபாயைப் போலவே, அபுதாபியில் இருந்து ஹோம் செக்-இன் சேவையைப் பெற விரும்பும் பயணிகள் பின்வரும் படிகளைப் பின்பற்றி சேவையை முன்பதிவு செய்யலாம்:

1. முதலில் உங்கள் மொபைலில் MORAFIQ செயலியைப் பதிவிறக்கி, பதிவு செய்ய வேண்டும்.

2. பின்னர், விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக ஐந்து மணிநேரம் வரை இந்த சேவையைத் தேர்வுசெய்யலாம் மற்றும் முகவர்கள் உங்கள் வீட்டிற்குச் செல்வதற்கு வசதியான நேரத்தையும் பயணிகள் தேர்ந்தெடுக்கலாம்.

3. மாறாக, செயலியைப் பதிவிறக்காமல் சேவையைப் பெற விரும்பினால், எதிஹாட் ஏர்வேஸ் இணையதளத்திற்குச் சென்று ‘ஹோம் செக்-இன்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

4. அடுத்ததாக, ‘Book Now’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும், அங்கு நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கி அல்லது உள்நுழைந்த பிறகு, குறிப்பிட்ட விவரங்களை நிரப்பும்படி கேட்கப்படுவீர்கள். அதையடுத்து செக்-இன் முகவர்கள் உங்களைச் சந்திக்க வசதியான நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

பேக்கேஜ்கள்:

  • கோரல் (Coral) – 185 திர்ஹம்ஸ்க்கு இரண்டு லக்கேஜ்கள் வரை செக்-இன் செய்யலாம் (VAT தவிர)
  • சில்வர் (Silver) – 220 திர்ஹம்ஸ்க்கு நான்கு லக்கேஜ்கள் வரை செக்-இன் செய்யலாம் (VAT தவிர)
  • கோல்டு(Gold) – 280 திர்ஹம்ஸ்க்கு ஆறு லக்கேஜ்கள் வரை செக்-இன் செய்யலாம் (VAT தவிர)
  • டயமண்ட் (Diamond) – 340 திர்ஹம்ஸ்க்கு எட்டு லக்கேஜ்கள் வரை செக்-இன் செய்யலாம் (VAT தவிர)
  • பிளாட்டினம் (Platinum) – 400 திர்ஹம்ஸ்க்கு (VAT தவிர்த்து) பத்து லக்கேஜ்கள் வரை செக்-இன் செய்ய முடியும்
  • 10 க்கும் மேற்பட்ட லக்கேஜ்கள் எனில் ஒவ்வொறு கூடுதல் லக்கேஜ்களுக்கும் 35 திர்ஹம்கள் செலுத்த வேண்டும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!