அமீரக செய்திகள்

வெளிநாடுகளில் எகிறும் வெங்காய விலை.. ஏற்றுமதிக்கான தடையை காலவரையன்றி நீட்டித்த இந்தியா..!!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு கடந்த ஆண்டு இறுதியில் விதிக்கப்பட்டிருந்த தடை 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடியிவிருந்த நிலையில், தற்பொழுது இந்த தடை காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது இந்தியாவில் வரவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சில வெளிநாட்டு சந்தைகளில் வெங்காய விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து உள்ளூர் சந்தையில் விலை பாதியாகக் குறைந்துள்ளதாலும், இந்த சீசனில் விளைச்சல் அதிகமாக இருப்பதாலும் இந்திய அரசு விதித்த இந்தத் தடை நீக்கப்படும் என்று வர்த்தகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இந்திய அரசு பிறப்பித்த உத்தரவால் வரத்தகர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், பங்களாதேஷ், மலேசியா, நேபாளம் போன்ற நாடுகள் வெங்காய விநியோகத்தில் உள்ள உள்நாட்டு உற்பத்தி தட்டுப்பாட்டை நிரப்ப இந்தியாவிலிருந்தே இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளன. மேலும் இந்த நாடுகளில் இந்தியா அறிவித்த வெங்காய தடைக்கு பின்னர் வெங்காயமானது அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அமீரகத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது 8 திர்ஹம்ஸ் வரையிலும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தற்சமயம் அதிகரித்து வரும் வெங்காய உற்பத்தியால் வெங்காய விலையானது வீழ்ச்சியை எதிர்கொண்ட நிலையில், நேற்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட இந்த தடை நீட்டிப்பானது ஆச்சரியமளிப்பதாகவும் மற்றும் முற்றிலும் இது தேவையற்றதாகவும் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏனெனில், வெளிநாடுகளுக்கு வெங்காய இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் சீனா அல்லது எகிப்து போன்ற நாடுகளை விட குறைவான ஏற்றுமதி நேரங்களைக் கொண்ட இந்தியாதான், ஆசிய நாடுகளின் வெங்காய இறக்குமதியில் பாதிக்கும் மேலானது எனவும் வர்த்தகர்கள் மதிப்பிடுகின்றனர். அத்துடன் மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த நிதியாண்டில் இந்தியா 2.5 மில்லியன் மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!