ADVERTISEMENT

மழையோ வெயிலோ.. இனி துபாய்வாசிகள் இலவசமாக குடையை வாடகைக்கு எடுக்கலாம்.. எப்படினு தெரியுமா..??

Published: 24 Mar 2024, 7:34 PM |
Updated: 24 Mar 2024, 7:34 PM |
Posted By: admin

துபாயில் வசிக்கும் நபர்கள் திடீரென மழை பெய்யும் போது குடை இல்லாமல் மழையில் நனைந்து கொண்டே செல்வது பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பலருக்கும் நடந்திருக்கும். இனி இத்தகைய சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் பயணிகள் இனி இலவசமாக குடையை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என RTA அறிவித்துள்ளது.  

ADVERTISEMENT

அதாவது துபாய் எமிரேட்டில் உள்ள பயணிகள் தங்களுடைய நோல் கார்டுகளைப் பயன்படுத்தி குடையை இலவசமாக வாடகைக்கு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது நேற்று (சனிக்கிழமை) தொடங்கப்பட்டதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

துபாயில் உள்ள அல் குபைபா பேருந்து மற்றும் மெட்ரோ நிலையத்தில் தற்போது கிடைக்கும் இந்த ‘ஸ்மார்ட் குடை சேவை’யானது (smart umbrella service) மூன்று மாத சோதனை ஓட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தின் முடிவில் மதிப்பீட்டிற்குப் பிறகு, மற்ற நிலையங்களுக்கு சேவையை விரிவுபடுத்துவது குறித்து RTA பரிசீலிக்கும் என்று ஆணையத்தின் பொதுப் போக்குவரத்து முகமையின் போக்குவரத்து அமைப்புகளுக்கான இயக்குநர் காலித் அல் அவாதி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

எப்படி செயல்படுகிறது?

  • அல் குபைபா பேருந்து நிலையம் அல்லது மெட்ரோ நிலையத்தின் உள்ளே, பயணிகள் குடைகள் வைக்கப்பட்டுள்ள ஒரு ஸ்க்ரீன் மற்றும் பாக்ஸ் ஸ்டாண்டைக் காணலாம். இது: UmbraCity, Umbrella Sharing Network என பெயரிடப்பட்டிருக்கும்.
  • திரையில் இணைக்கப்பட்டுள்ள கணினியில் உங்கள் நோல் கார்டை டேப் செய்வதன் மூலம் நீங்கள் குடையை வாடகைக்கு எடுக்கலாம்.

கனேடிய நிறுவனமான UmbraCity உடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், துபாயின் நடைப்பயணத்தை மேம்படுத்தவும், வெயில் மற்றும் மழையில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வசதியான மற்றும் நிலையான வழியை பொதுமக்களுக்கு வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் “Nol கார்டைப் பயன்படுத்தி ஸ்மார்ட் குடைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம், RTA மற்றும் UmbraCity ஆகியவை துபாய் முழுவதும் ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவதற்கு பங்களிக்கின்றன” என்றும் அல் அவாதி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel