அமீரக செய்திகள்

அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் E11 மற்றும் E311 ஆகிய இரண்டு சாலைகளும் மூடல்.. மாற்று வழியைப் பயன்படுத்த காவல்துறை எச்சரிக்கை..!!

அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் முக்கிய சாலைகள் இன்றும் மூடப்பட்டுள்ளதாகவும், துபாய் செல்லும் குடியருப்பாளர்கள் மாற்று வழியைப் பயண்படுத்துமாறும் அபுதாபி காவல்துறை மற்றும் ITC வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபியின் ஒருங்கினைந்த போக்குவரத்து மையம் (ITC) ஆகிய இரண்டும் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஷேக் மக்தூம் பின் ராஷித் (E11) மற்றும் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் (E311) ஆகிய இரண்டு சாலைகளிலும் துபாயை நோக்கி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

ITC பகிர்ந்துள்ள வரைபடத்தின்படி, E11 சாலையில் கன்தூத்திலிருந்து ஜெபல் அலி வரையிலும் சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் துபாயை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் எமிரேட்ஸ் சாலையை (E611) பயன்படுத்துமாறு அபுதாபி காவல்துறையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோன்று நேற்று, அபுதாபி துபாய் இடையேயான E11 சாலையில் துபாய் நோக்கி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் E311 சாலையைப் பயன்படுத்துமாறும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் E311 சாலையும் மூடப்படுவதாக அபுதாபி காவல்துறை இன்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த சாலை மூடலானது எத்தனை காலத்திற்கு இருக்கும் என்பது குறித்த தகவல்களை அபுதாபி கவல்துறையினர் தெரிவிக்கவில்லை. எனவே, அபுதாபியிலிருந்து துபாய் செல்பவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!