ADVERTISEMENT

அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் சாலை தற்போது மூடல்..!! மாற்றுவழியை பயன்படுத்த காவல்துறை அனுப்பிய வார்னிங் மெசேஜ்..!!

Published: 19 Apr 2024, 5:15 PM |
Updated: 19 Apr 2024, 5:15 PM |
Posted By: admin

அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் வாகன ஓட்டிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை அபுதாபி காவல்துறை தற்பொழுது அறிவித்துள்ளது. அதாவது அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் ஷேக் மக்தூம் பின் ரஷீத் சாலையின் குறிப்பிட்ட பகுதியானது மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதாவது அபுதாபி – துபாய் எல்லையில் அமைந்துள்ள கந்தூத் எனும் இடத்தை கடந்து வரும் ஸாய் ஷூவேப் பிரிட்ஜை தாண்டிய பிறகு வரும் சாலையில் இந்த மூடலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருக்கக்கூடிய ஷஹாமாவை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையானது எச்சரிக்கை செய்தியாக அவர்களது மொபைல் ஃபோனிற்கு இந்த தகவலை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

இதனால் இந்த பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மாற்று வழியினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

ADVERTISEMENT