அமீரக செய்திகள்

இன்று முதல் ஏப்ரல் 14 வரை துபாய் – அபுதாபி செல்லும் பேருந்து வழித்தடங்களில் மாற்றம்.. RTA வெளியிட்டுள்ள அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ருக்கு அறிவிக்கப்பட்ட நீண்ட விடுமுறை நாட்கள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மேலும், இந்த நீண்ட விடுமுறையில் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்கள் விடுமுறையை வெவ்வேறு இடங்களுக்கு சென்று அனுபவிக்க திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்டர்சிட்டி பஸ் வழித்தடங்களில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த மாற்றங்கள் இன்று ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 14 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் RTA தெரிவித்துள்ளது.

எனவே, ஈத் விடுமுறையை கொண்டாட நீங்கள் துபாயிலிருந்து அபுதாபிக்கு பொதுப் பேருந்தில் பயணிக்க திட்டமிட்டிருந்தால், RTA அறிவித்துள்ள இந்த மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.

ஈத் அல் ஃபித்ர் விடுமுறைக்கான பாதை மாற்றங்கள்:

துபாய் மற்றும் அபுதாபி இடையே இயக்கப்படும் E100 பேருந்தானது, அல் குபைபா நிலையத்திலிருந்து (Al Ghubaiba Station) புறப்படுவதற்குப் பதிலாக இபின் பதூதா பேருந்து நிலையத்திற்குத் (Ibn Battuta Bus Station) திருப்பிவிடப்படும் என்று RTA தெரிவித்துள்ளது.

அதேபோன்று துபாயிலிருந்து அபுதாபிக்கு செல்லும் மற்றொரு பேருந்தான E102 ஆனது, இபின் பதூதா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபியில் உள்ள அல் முசாஃபா ஷாபியா நிலையத்திற்கு (Al Mussafah Shabia Station) இயக்கப்படும் எனவும் RTA குறிப்பிட்டுள்ளது.

 

இவை தவிர, மற்ற எமிரேட்களுக்கு இயக்கப்படும் RTA பேருந்துகளின் இயக்க நேரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும், பாதை மாற்றங்கள் பற்றிய புதுப்பிப்புகளுக்கு பயணிகள் S’hail செயலியைப் சரிபார்க்குமாறும் RTA குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், வாட்டர் டாக்ஸி, துபாய் ஃபெர்ரி மற்றும் அப்ரா உள்ளிட்ட கடல் போக்குவரத்துக்கான நேரத்தையும் அப்ளிகேஷனில் காணலாம் எனவும் RTA குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஈத் விடுமுறையை முன்னிட்டு துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் பேருந்துகளின் இயக்க நேரத்திலும் RTA மாற்றங்களை அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!