ADVERTISEMENT

ஷார்ஜாவில் நடந்த துயர சம்பவம்.. தீவிபத்தில் தப்பிக்க 30வது மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட குடியிருப்பாளர்..!!

Published: 8 Apr 2024, 3:53 PM |
Updated: 8 Apr 2024, 3:55 PM |
Posted By: admin

ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் கடந்த வியாழக்கிழமை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த குடியிருப்புவாசி ஒருவர், தீயிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் கட்டிடத்தின் 30 வது மாடியிலிருந்து குதித்து தனது உயிரை விட்ட சோக சம்பம் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜாவில் வசிக்கும் கென்யா நாட்டை சேர்ந்த ஷிகண்டா (Omanua Godfrey Shikanda) என்ற 36 வயதுடைய அமீரக குடியிருப்பாளர் தான், 30 வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை விட்டவர் ஆவார். இந்த சம்பவம் குறித்து ஷிகண்டாவின் சகோதரர் டிக்சன் ஒகுசிம்பா கூறும்போது, விதி தனது சகோதரனின் அகால மரணத்திற்கு வழிவகுத்து விட்டதாக கனத்த இதயத்துடன் தனது சோகத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், தீ விபத்தின் போது தொழில் விஷயமாக தான் இலங்கைக்கு சென்றிருந்ததாகவும், சம்பவம் நடந்தவுடன் அவரது நண்பர்கள் தொடர்ந்து தன்னை அழைக்க முயன்றும், தான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்ததால் தொடர்பு கொள்ள இயலாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் இறுதியாக அடுத்த நாள் நான் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, ​​எனது சகோதரனின் கட்டிடத்தில் தீப்பற்றியதையும் அவர் காணாமல் போனதையும் நான் அறிந்து கொண்டதாக கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதனை கேட்டவுடன் தனது சகோதரனின் நிலையை தெரிந்துகொள்ள உடனடியாக தனது நண்பர்களை அவரது நண்பரின் இடத்திலும், அலுவலகத்திலும் தேடிப்பார்க்க கூறியதாகவும், அவரது சகோதரரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக நண்பர்களை புஹைரா காவல் நிலையத்திற்கு அனுப்பி சம்பவத்தை கூறியபோதே, தனது சகோதரர் கீழே குதித்து உயிரை விட்ட இதயத்தை உடைக்கும் உண்மையைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஒகுசிம்பாவின் கூற்றுப்படி, அவரது அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது கொண்டிருந்தபோது அவர் தூக்கத்திலிருந்து திடீரென எழுந்து செய்வதறியாது திகைத்திருக்க வேடனும். பின்னர் அடர்ந்த புகையைக் கண்டதும் அவர் பீதியடைந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் தீவிர முயற்சியில் ஜன்னலில் இருந்து குதிக்கும் விதியை அவர் எடுத்திருக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

ஷார்ஜாவில் கட்டிடங்களில் குழாய்களை நிறுவும் பைப்பிங் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த ஷிகண்டா, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்துள்ளார். மேலும் இவருக்கு கென்யாவில் மனைவி மற்றும் 14 வயது மகள் மற்றும் அவரது 6 வயது மகன் என இரண்டு சிறு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.