அமீரக செய்திகள்

ஷார்ஜாவில் நிறம் மாறிய வெள்ள நீர்.. அச்சத்தில் குடியிருப்பாளர்கள்.. அவசர உதவிக்கு வாட்ஸ்அப் சேவை அறிவிப்பு..!!

கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இருப்பினும் ஓரிரு நாட்களில் மற்ற எமிரேட்டுகளில் வெள்ளநீர் வடிந்து விட்டாலும் ஷார்ஜாவில் தற்பொழுது வரை குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீரானது வற்றாமல் உள்ளது.

இதனால் குடியிருப்பாளர்கள் பலரும் அன்றாட செயல்பாட்டிற்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கும் மேலாக தேங்கியிருந்த மழைநீர் தற்போது நிறம் மாறி பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இதனால் கழிவுநீர் வெள்ளநீரில் கலந்திருக்கலாம் என குடியிருப்பாளர்கள் அஞ்சுகின்றனர். மேலும் இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக் தவிக்கின்றனர்.

இந்நிலையில் ஷார்ஜாவில் உள்ள உள்ளூர் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, அத்தகைய குடும்பங்களின் அவசர கோரிக்கைகளை கவனிக்குமாறு ஷார்ஜா சமூக சேவை துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, 065015161 என்ற எண்ணில் உள்ள வாட்ஸ்அப் அப்ளிகேஷன் மூலம் கோரிக்கைகளைப் பெறவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தொடர்பு கொள்ளவும், அதற்கேற்ப அவர்களுக்கு உதவ அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை குழு சமூக சேவை துறையை அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், புயலால் பாதிக்கப்பட்ட துபாயில் உள்ள குடிமக்களுக்கும் வாட்ஸ்அப்பில் (0583009000) எண் ஒதுக்கப்பட்டுள்ளது. துபாய் இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தீவிர வானிலைக்கு திட்டமிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

இந்த உத்தரவுகளின் கீழ், முகமது பின் ரஷீத் வீட்டுவசதி நிறுவனத்தின் செயல் இயக்குநர் உமர் ஹமத் புஷாஹப், பாதிக்கப்பட்ட குடிமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்து அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பதை தீர்மானிக்க ஒரு குழுவை நிறுவியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!