அமீரக செய்திகள்

Dubai Duty Free raffle-ல் 1 மில்லியன் டாலரை வென்ற இந்தியர்..!! இரண்டாவது முயற்சியிலேயே அடித்தது அதிர்ஷ்டம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை (6.1.2021) நடைபெற்ற துபாய் டூட்டி ஃபிரீ மில்லினியம் மில்லியனர் (Dubai Duty Free Millennium Millionaire) குலுக்கலில் (draw) அமீரகத்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர் 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

கனிகாரம் ராஜசேகர் எனும் ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய நாட்டவர் இந்த ஆண்டின் துபாய் டூட்டி ஃபிரீ மில்லினியம் மில்லியனரின் முதல் மில்லியனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல நபர்கள் பல வருடங்களாக தொடர்ந்து டிக்கெட் வாங்கியும் வென்றிராத பட்சத்தில், இவர் தனது இரண்டாவது முயற்சியிலேயே துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் குலுக்கலில் வெற்றி வாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தனது முதல் முயற்சிக்குப் பிறகு தனது இரண்டாவது முயற்சியில் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

45 வயதான ராஜசேகர் இது குறித்து கூறுகையில், வெற்றி அடைந்ததை நினைத்து தான் பெரும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறியுள்ளார். அத்துடன் தனக்குக் கிடைக்கும் பரிசுத்தொகையின் மூலம் தனது குழந்தைகளின் கல்விக்காக பணத்தை பயன்படுத்தவும், ஹைதராபாத்தில் தனக்கென ஒரு வில்லாவை உருவாக்கவும், துபாயில் இமிகிரேஷன் சர்வீஸ் கம்பெனி உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜசேகர் வென்ற டிக்கெட் எண் 3546 டிசம்பர் 18 அன்று ஆன்லைனில் வாங்கிய மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 347 இல் எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்லினியம் மில்லியனர் டிராவைத் தொடர்ந்து, இரண்டு கார்கள் மற்றும் மூன்று மோட்டார் பைக் வெல்பவருக்கான குலுக்கல் (Draw) நடைபெற்றது.

இதில் துபாயைச் சேர்ந்த 24 வயதான இந்திய மாணவர் சையத் ஷாபர் ஹசன் நக்வி என்பவர், BMW 750Li xDrive M Spor (Donington Grey) காரை வென்றுள்ளார்.

துபாயில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டோ பெர்னாண்டோ Range Rover Sport HST 3.0 400HP (Black) காரை வென்றிருக்கிறார்.

அத்துடன் துபாயைச் சேர்ந்த 38 வயதாகும் இந்திய நாட்டவரான நிதின் அக்ராவத், Harley-Davidson Softail Low Rider (Billiard Red) மோட்டார் பைக்கையும், துபாயில் வசிக்கும் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 35 வயதான மார்த்தா ரோசாரி, Indian Vintage Dark Horse (Thunder Black Smoke) மோட்டார் பைக்கையும், துபாயில் வசிக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த அகமது நாசர் கமல் ஷேக், Aprilia Tuono Factory (Atomico Racer) மோட்டார் பைக்கையும் வென்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!