அமீரக செய்திகள்

ஒரு எமிரேட்டில் இருந்து மற்றொரு எமிரேட்டிற்கு செல்ல திட்டமிடுகிறீர்களா?? உங்கள் பயணத்திற்கான வழிகாட்டி இதோ…

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புதிதாக வந்திருக்கிறீர்களா? நீங்கள் ஒவ்வொரு எமிரேட்டையும் சுற்றிப்பார்க்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளாகவோ அல்லது உங்கள் எமிரேட்டிற்கு வெளியே பயணம் செய்ய விரும்பும் குடியிருப்பாளராகவோ இருந்தால், நகரங்களுக்கு இடையே பயணம் செய்வதற்கான பொது போக்குவரத்து விருப்பங்கள் குறித்து தெரிந்து கொள்வது சிறந்தது.

அமீரகத்தில் உள்ள பொதுப் போக்குவரத்து நெட்வொர்க் எமிரேட்டுகளுக்கு இடையே சுமூகமான பயணத்தை வழங்குகிறது. இவ்வாறு ஒரு எமிரேட்டில் இருந்து மற்றொரு எமிரேட்டிற்கான பேருந்து சேவைகளைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை இங்கு பார்க்கலாம்.

துபாய்

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தற்போது, துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ஹத்தா, அலுஜைராஹா ஆகிய இடங்களுக்கு இடையே E100, E101, E201, E303, E306, E307, E307A, E315, E400, E411, E16 மற்றும் E700 போன்ற பேருந்து சேவைகளை இயக்குகிறது.

துபாய் பேருந்து அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை முழுமையாக இயக்கப்படுகிறது.

வழித்தடங்கள்:

  • E100: அல் குபைபா பேருந்து நிலையம் மற்றும் அபுதாபி சென்ட்ரல் பஸ் ஸ்டேஷன் இடையே
  • E101: இப்னு பதூதா பஸ் நிலையம் மற்றும் அபுதாபி சென்ட்ரல் பஸ் ஸ்டேஷன் இடையே
  • E201: அல் குபைபா பேருந்து நிலையம் மற்றும் அல் அய்ன் சென்ட்ரல் பஸ் ஸ்டேஷன் இடையே
  • E303: யூனியன் ஸ்கொயர் பஸ் நிலையம் மற்றும் ஷார்ஜா, அல் ஜுபைல் பஸ் நிலையம் இடையே
  • E306: அல் குபைபா பஸ் நிலையம் மற்றும் ஷார்ஜா அல் ஜுபைல் பஸ் நிலையம் இடையே
  • E307: தேரா சிட்டி சென்டர் பஸ் நிலையம் மற்றும் ஷார்ஜா, அல் ஜுபைல் பஸ் நிலையம் இடையே
  • E307A: அபு ஹைல் பஸ் நிலையம் மற்றும் ஷார்ஜா, அல் ஜுபைல் பஸ் நிலையம் இடையே
  • E315: எடிசலாட் பேருந்து நிலையம் மற்றும் ஷார்ஜா அல் முவைலா பஸ் டெர்மினல் இடையே
  • E400: யூனியன் ஸ்கொயர் பேருந்து நிலையம் மற்றும் அஜ்மான், அல் முசல்லா பஸ் நிலையம் இடையே
  • E411: எடிசலாட் பேருந்து நிலையம் மற்றும் அஜ்மான், அல் முசல்லா பேருந்து நிலையம் இடையே
  • E16: சப்கா பஸ் ஸ்டேஷன் மற்றும் ஹத்தா பஸ் ஸ்டேஷன் இடையே
  • E700: யூனியன் ஸ்கொயர் பஸ் ஸ்டேஷன் மற்றும் ஃபுஜைரா, சோய்த்ராம்ஸ் (Choithrams) சூப்பர்மார்க்கெட் பஸ் நிலையம் இடையே

இவை தவிர, RTA ஆனது துபாயிலிருந்து ஹத்தாவிற்கு இரண்டு வழித்தடங்களை இயக்குகிறது.

H02 (ஹத்தா எக்ஸ்பிரஸ்): துபாய் மால் பஸ் நிலையம் – ஹத்தா பஸ் ஸ்டேஷன்

இந்த பேருந்து தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை டீலக்ஸ் கோச்களைப் பயன்படுத்துகிறது. எனவே, ஒரு பயணத்திற்கு 25 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

H04 (ஹத்தா ஹாப் ஆன் ஹாப் ஆஃப்): ஹத்தா பஸ் ஸ்டேஷனில் தொடங்கி அங்கேயே முடிவடையும் முழு பாதை

இந்த பஸ் ஹத்தா வாதி ஹப், ஹத்தா ஹில் பார்க், ஹத்தா டேம் மற்றும் ஹெரிட்டேஜ் வில்லேஜ் போன்ற நான்கு சுற்றுலா அடையாளங்களை கடந்து செல்கிறது. இது தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு 2 திர்ஹம் என்ற கட்டணத்தில் இயங்குகிறது.

நீங்கள் துபாய் இன்டர்சிட்டி பஸ் வழித்தடங்களுக்கு நோல் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். நேரம் மற்றும் கட்டணம் போன்ற கூடுதல் தகவலுக்கு, http://rta.ae ஐப் பார்வையிட வேண்டும்.

ஷார்ஜா

நீங்கள் ஷார்ஜாவிலிருந்து துபாய், அபுதாபி, அஜ்மான், ஃபுஜைரா ஆகிய மற்ற எமிரேட்களுக்கு கீழ்க்கண்ட பேருந்துகளில் பயணிக்கலாம்.

  • 117G: 35 திர்ஹம் கட்டணத்தில் ஜுபைல் பஸ் நிலையம் மற்றும் அபுதாபி பஸ் நிலையம் இடையே பயணிக்கலாம்.
  • 116G: ஜுபைல் பஸ் நிலையம் மற்றும் ஃபுஜைரா நிறுத்தங்கள் இடையேயான பயணத்திற்கு 30 திர்ஹம் கட்டணம்
  • 308G, 309G, மற்றும் 313G மற்றும் பிற வழிகள்: ஷார்ஜாவிற்கும் துபாயில் உள்ள பல்வேறு நிறுத்தங்களுக்கும் இடையே 15 திர்ஹம் போன்ற குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை
  • 114G: ஜுபைல் பஸ் நிலையம் மற்றும் அஜ்மானில் உள்ள பல்வேறு நிறுத்தங்களுக்கு இடையே 8 திர்ஹம் போன்ற குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை

மேற்கூறியவை தவிர, உங்கள் இன்டர்சிட்டி பயணத்தை இன்னும் விரிவாக திட்டமிட, srta.gov.ae  என்ற இணையதளத்திற்கு செல்லலாம்.

அபுதாபி

நீங்கள் அபுதாபியில் இருந்தால், ஷார்ஜா மற்றும் துபாய்க்கு உங்களை இணைக்கும் இன்டர்சிட்டி பேருந்துகள் கிடைக்கின்றன. பின்வரும் RTA வழித்தடங்கள் துபாய் மற்றும் அபுதாபியை இணைக்கிறது.

  • E100: அல் குபைபாபஸ் நிலையம் மற்றும் அபுதாபி, சென்ட்ரல் பஸ் ஸ்டேஷன் இடையே
  • E101: இபின் பதூதா பேருந்து நிலையம் மற்றும் அபுதாபி சென்ட்ரல் பஸ் ஸ்டேஷன் இடையே பேருந்து சேவை

SRTA ரூட் 117R அபுதாபியை ஷார்ஜாவிற்குள் உள்ள பல நிறுத்தங்களுக்கு 30 திர்ஹம் கட்டணத்தில் இணைக்கிறது.

  • 117R: அபுதாபி பஸ் ஸ்டேஷன்/அபுதாபி மற்றும் அல் கான் இன்டர்சேஞ்ச் ஸ்டாப் 2 இடையே, அல் வஹ்தா ஸ்ட்ரீட் கேரிஃபோர் ஸ்டாப் 1, அல் வஹ்தா ஸ்ட்ரீட் மேக்ஸ் ஸ்டாப் 1, அல் வஹ்தா ஸ்ட்ரீட் போஸ்ட் ஆபிஸ் ஸ்டாப் 1, இத்திஹாட் பார்க் ஸ்டாப் 1, இத்திஹாத் சாலை அன்சார் மால் ஸ்டாப் 1 , இட்டிஹாத் சாலை ரெஸ்டாரன்ட் காம்ப்ளக்ஸ் ஸ்டாப் 1, இத்திஹாத் சாலை சஃபீர் மால் நிறுத்தம் 1, இத்திஹாத் சாலை சஃபீர் மால் நிறுத்தம் 2, ஜுபைல் நிலையம்/ஷார்ஜா, கிங் ஃபைசல் ஸ்ட்ரீட் அல் எஸ்டிக்லால் ஸ்ட்ரீட் ஜங்சன் ஸ்டாப் 1, கிங் ஃபைசல் ஸ்ட்லரீட் ஷார்ஜா இஸ்லாமிய பேங் நிறுத்தம் ஸ்டாப் 2

இது தவிர, அபுதாபியிலிருந்து உங்கள் நகரங்களுக்கு இடையேயான பயணத்தைத் திட்டமிட, https://darbi.itc.gov.ae/ ஐப் பார்வையிடலாம்.

  1. இணையதளத்தில் உள்நுழைந்ததும் பக்கத்தில் உள்ள மெனுவில்,  “journey planner” என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் புறப்படும் மற்றும் சேரும்  நிலையங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்களுக்கு விருப்பமான போக்குவரத்து முறையைத் தேர்ந்தெடுத்து நேரம் மற்றும் கட்டணத்தை சரிபார்க்கவும்.

ராஸ் அல் கைமா

நீங்கள் ராஸ் அல் கைமா மற்றும் பிற எமிரேட்டுகளுக்கு இடையே பயணிக்க விரும்பினால், இன்டர்சிட்டி பேருந்துகள் ராஸ் அல் கைமாவில் (RAK) இருந்து துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், அபுதாபி மற்றும் அல் அய்ன் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.

  • RAK – துபாய் யூனியன் பஸ் நிலையம்: சனிக்கிழமை முதல் வெள்ளி வரை காலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை (கட்டணம் 27 திர்ஹம்ஸ்)
  • RAK – ஷார்ஜா: சனி முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை (27 திர்ஹம்ஸ் கட்டணம்)
  • RAK to அஜ்மான்: சனி முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை (20 திர்ஹம்ஸ் கட்டணம்)
  • RAK – உம் அல் குவைன்: சனி முதல் வெள்ளி வரை காலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை (15 திர்ஹம்)
  • அபுதாபி- RAK: சனி முதல் வெள்ளி வரை காலை 9 மணி மற்றும் மாலை 3 மணிக்கு (47 திர்ஹம்)
  • RAK to அல் அய்ன்: வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மதியம் 2 மணிக்கு (47 திர்ஹம் கட்டணம்)
  • RAK to குளோபல் வில்லேஜ்: வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மாலை 4 மணிக்கு (30 திர்ஹம்ஸ் கட்டணம்).
  • RAK – துபாய் மால்: வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மதியம் 2 மணி மற்றும் 5 மணிக்கு (30 திர்ஹம்ஸ் கட்டணம்)

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!