அமீரக செய்திகள்

அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு ‘ஈத் அல் ஃபித்ர்’ விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) நாட்டில் உள்ள தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்களின் அதிகாரப்பூர்வ தேதிகளை அறிவித்துள்ளது.

மனிதவள அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிவிப்பின்படி, ரமலான் 29 (ஏப்ரல் 8) முதல் ஷவ்வால் 3 வரை அமீரகத்தில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ரமலான் நோன்பு 29 நாட்களுடன் நிறைவைடைந்தால் சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை சேர்த்து, ஏப்ரல் 6 ம் தேதி முதல் ஏப்ரல் 11 (வியாழக்கிழமை) வரை என ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

அதுவே, ரமலான் நோன்பு 30 நாட்களாக நீடித்தால், ஏப்ரல் 6ம் தேதி (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் 14ம் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை என ஒன்பது நாட்கள் மிக நீண்ட விடுமுறை நாட்களை அமீரக குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது துறை ஊழியர்களுக்கு ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை அரசு மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் பொது துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டதை போன்றே ஒரே மாதிரியான விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளானது பிறை பார்ப்பதன் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு கூடி அதிகாரப்பூர்வ தேதியை உறுதிப்படுத்தும். எவ்வாறாயினும், வானியல் கணக்கீடுகளின்படி அமீரகத்தில் இந்த ஆண்டு ஈத் அல் பித்ர் ஆனது, ஏப்ரல் 10ம் தேதி அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!