ADVERTISEMENT

UAE: கட்டண பார்க்கிங்கிற்கான புதிய பகுதிகளை அறிவித்துள்ள அபுதாபி.. ஜூலை 29 முதல் நடைமுறை..!!

Published: 27 Jul 2024, 3:01 PM |
Updated: 27 Jul 2024, 3:13 PM |
Posted By: admin

அமீரகத்தை பொறுத்தவரை வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். குறிப்பாக துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய எமிரேட்டுகளே பார்க்கிங் கட்டணங்களை பெருமளவு வசூலிக்கின்றன. இதில் அபுதாபியை பொறுத்தவரை அபுதாபியின் முக்கிய பகுதியான அபுதாபி சிட்டியில் மட்டுமே வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அபுதாபி சிட்டி மட்டுமல்லாது அபுதாபியில் இருக்கக்கூடிய மக்தா பகுதி வரையிலும் கட்டண பார்க்கிங் முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது அபுதாபியின் புறநகர் பகுதியில் கட்டண பார்க்கிங் முறை அமல்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அபுதாபியில் வரும் ஜூலை 29 முதல் கலீஃபா கமர்ஷியல் டிஸ்ட்ரிக்ட் மற்றும் கலீஃபா நகரில் உள்ள எதிஹாட் பிளாசா ஆகிய இரண்டு பகுதிகளில் கட்டண வாகன நிறுத்தம் தொடங்கும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது குறித்த ஒரு சமூக ஊடக பதிவில், Mawaqif பார்க்கிங் சேவைக்கான உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் திசை அடையாளங்கள் (directional signs) அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் அபுதாபி மொபிலிட்டி இந்த முயற்சியானது சட்டவிரோத வாகன நிறுத்தங்களை குறைப்பது, நகரின் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் தெருக்களின் காட்சி முறையீட்டைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT