அமீரக செய்திகள்

குறிப்பிட்ட தொழில்களுக்கான லைசென்ஸ் கட்டணத்தை 50% க்கும் மேல் குறைத்த அபுதாபி..!!

அபுதாபி குளோபல் மார்க்கெட் (ADGM) அதன் அதிகார வரம்பிற்குள் நிதி அல்லாத மற்றும் சில்லறை உரிமங்களைப் பெறுவதற்கான கட்டணத்தை 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த திருத்தப்பட்ட உரிமக் கட்டண முறையானது ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் அபுதாபி குளோபல் மார்க்கெட் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் உள்ள அல் மரியா ஐலேண்ட் மற்றும் அல் ரீம் ஐலேண்ட் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ADGM இன் அதிகார வரம்பிற்குள் வரும் நிறுவனங்களுக்கு இந்த கட்டண முறை அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ், வணிகங்களின் நிதி அல்லாத வகைக்குள் வரும் லைசென்ஸ் கட்டணம் $10,000 இலிருந்து $5,000 வரை குறைக்கப்படும். அதே வகைக்கான வருடாந்திர உரிமம் புதுப்பித்தல் கட்டணம் $8,000 இலிருந்து $5,000 ஆக குறையும்.

அத்துடன், சில்லறை விற்பனைப் பிரிவிற்கான புதிய பதிவுக் கட்டணங்களும் $6,000ல் இருந்து $2,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. கூடவே சில்லறை விற்பனைப் பிரிவினருக்கான உரிமத்தை புதுப்பித்தலுக்கான கட்டணமும் 50 சதவீதக் குறைப்பைக் காணும் என்றும், இதன் மூலம் கட்டணம் $2,000 ஆகக் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது நடைமுறையில் இருக்கும் உரிமக் கட்டணங்கள் இந்த வருடம் டிசம்பர் 31-ம் தேதியுடன் காலாவதியாகும் என்பதால், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த புதிய திருத்தப்பட்ட கட்டண முறை நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று நிதி வகைக்குள் வரும் மற்ற வகைகளுக்கான கட்டணத்திலும் திருத்தங்கள் செய்யப்பட்டு கட்டணம் இப்போது $15,000 முதல் $20,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுப்பித்தல் கட்டணமும் $13,000 முதல் $15,000 வரையிலும், டெக் மற்றும் ஃபின்டெக் ஸ்டார்ட்அப்களுக்கு கட்டணம் $1,000 இலிருந்து $1,500 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. எனினும் ஸ்பெஷல் பர்ப்பஸ் வெஹிக்கிள் (SPV) வகைக்கான கட்டணம் மாறாமல் $1,900 ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!