UAE: எமிரேட்ஸ் ஐடியில் இருக்கும் ஃபோட்டோவை மாற்ற முடியுமா..?? அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன..?? முழுவிபரங்களும்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெசிடென்ஸி விசாவில் வசித்து வரும் நபர்கள் அவர்களுக்கான எமிரேட்ஸ் ஐடியை வைத்திருப்பார்கள். எமிரேட்ஸ் ஐடி வைத்திருக்கும் ஒரு சில நபர்களுக்கு எமிரேட்ஸ் ஐடியில் உள்ள புகைப்படம் நன்றாக இல்லை. அதனை மாற்ற முடியுமா..?? என்ற கேள்வி இருக்கலாம். அதற்கான பதிவுதான் இது.
அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) இணையதளத்தின்படி, ICP இன் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களில் ஒன்றில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் எமிரேட்ஸ் ஐடியில் புகைப்படத்தை மாற்ற முடியும். ஆனால் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய இரண்டு எளிய விஷயங்கள் உள்ளன. அதனை பின்வருமாறு காணலாம்.
1. உங்கள் புகைப்படம் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்தவும்
எமிரேட்ஸ் ஐடிக்கான ஃபோட்டோவை நீங்கள் ஸ்டுடியோவில் எடுக்கும் போது அங்குள்ள ஊழியரிடம் நீங்கள் எமிரேட்ஸ் ஐடிக்கான ஃபோட்டோ எடுப்பதை தெரியப்படுத்தினால் நல்லது. ஏனென்றால், எமிரேட்ஸ் ஐடிக்கான ஃபோட்டோவிற்கு சில நிபந்தனைகள் உள்ளன மற்றும் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
கடந்த 2022 இல், எமிரேட்ஸ் ஐடிகளில் இருக்கும் புகைப்படங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை ICP வெளியிட்டது. அவை பின்வருமாறு:
- ஃபோட்டோவானது உயர் தரமாகவும், சமீபத்தில் எடுக்கப்பட்ட வண்ண புகைப்படமாக இருக்க வேண்டும். அத்துடன் ஆறு மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும் (அகலம் 35 முதல் 40 மிமீ)
- வெள்ளை பின்னணி (white background) கொண்டிருக்க வேண்டும்
- சரியான முகபாவனைகள் இருக்க வேண்டும்
- தலையின் நிலையானது நேராக, சாய்க்காமல், புகைப்பட லென்ஸுக்கு இணையாக இருக்க வேண்டும்.
- கண்கள் வண்ண லென்ஸ்கள் பயன்படுத்தாமல் கேமராவை நோக்கி திறந்திருக்க வேண்டும்.
- கண்ணாடிகள் அணிந்திருப்பின் கண்களை மறைக்காத மற்றும் ஒளியைப் பிரதிபலிக்காத வரை ஏற்றுக்கொள்ளத்தக்கது.
- தலையை மூடுவது தேசிய உடை அல்லது மத நம்பிக்கையின் படி அனுமதிக்கப்படுகிறது.
- தெளிவுத்திறன் (பிக்சல்கள்): மை தடயங்கள் அல்லது சுருக்கம் இல்லாமல் குறைந்தது 600 dpi-யில் புகைப்படம் இருக்க வேண்டும்
2. உங்கள் பாஸ்போர்ட்டை உங்களுடன் எடுத்துச் செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்
விண்ணப்பதாரர்கள் கோரிக்கையை வைக்கும்போது புதுப்பிக்கப்பட்ட புகைப்படத்துடன் தங்கள் பாஸ்போர்ட்டைத் தங்களுடன் எடுத்துச் செல்வதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமர்ப்பித்தவுடன் விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க நமக்கு கிடைக்கும் பரிவர்த்தனை எண்ணை (transaction number) பயன்படுத்தி ICP இணையதளம் – icp.gov.ae-ல் சென்று தெரிந்து கொள்ளலாம்.
பின்பற்ற வேண்டிய படிகள்:
- ICP வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்தைப் பார்வையிடவும்: ICP இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி தனிநபர் ICP வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டருக்கு செல்ல வேண்டும்
- விண்ணப்பத்தை டைப் செய்யவும்: எமிரேட்ஸ் ஐடியை மாற்றுவதற்கான விண்ணப்பம், தேவையான மாற்றங்களைக் குறிப்பிடுவதன் மூலம் டைப்பிங் செய்யப்பட வேண்டும்
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்: பூர்த்தி செய்யப்பட்டவுடன், சரிபார்ப்பிற்காக விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.
நீங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தவுடன், எமிரேட்ஸ் ஐடி வழங்க இரண்டு முதல் மூன்று வேலை நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதன் நிலையை icp.gov.ae என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம். இந்த செயல்பாட்டிற்கான கட்டணம் 485 திர்ஹம்ஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel