அமீரக செய்திகள்

துபாய்: பிஸ்னஸ் பே பகுதியில் இன்று திடீரென ஏற்பட்ட தீவிபத்து.. தீயணைக்கும் பணிகள் தீவிரம்..

துபாயின் முக்கிய வர்த்தக பகுதியான பிஸ்னஸ் பே (business bay) பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிஸ்னஸ் பே பகுதியில் உள்ள மராசி டிரைவில் அமைந்திருக்கும் டமாக் பிசினஸ் டவர் அருகே இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அடர்ந்த கறுப்பு புகைகள் வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தீவிபத்தானது கட்டிடத்தில் ஏற்படவில்லை என்றும் கட்டிடத்திற்கு அருகில் உள்ள சிறிய காலி இடத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த தகவலை அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். காலி இடத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டதால் இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. காவல்துறையினர் இது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமீரகத்தில் கோடை கால வெயிலின் உச்சத்தைத் தொடர்ந்து தீவிபத்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் இருப்பதால் குடியிருப்பாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் வாகனங்களில் செல்லும் போதும் குடியிருப்பு பகுதிகளிலும் எளிதில் தீவிபத்து ஏற்படக்கூடிய பொருட்களில் இருந்து கவனமாக இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!