ADVERTISEMENT

துபாய்: இனி லைசென்ஸ் ரினியூவலுக்கு மொபைல் மட்டும் போதும்.. புதிய வசதியை அறிமுகப்படுத்திய RTA..

Published: 4 Jul 2024, 9:56 AM |
Updated: 4 Jul 2024, 10:03 AM |
Posted By: admin

துபாயில் இருக்கக்கூடிய சில வாகன ஓட்டிகள் இப்போது தங்கள் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப் பதிவை (vehicle registration) தங்கள் மொபைல் போன்கள் மூலம் புதுப்பிக்கலாம் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் இனி டிரைவிங் லைசென்ஸை வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் தங்களின் மொபைலிலேயே லைசென்ஸ் தொடர்பான சேவைகளை பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதாவது சாம்சங் மொபைல் வைத்திருக்கும் நபர்கள் இப்போது தங்கள் வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமத் தகவலை RTA செயலி மூலம் நேரடியாகத் தங்கள் Samsung Wallet இல் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை, ஜூலை 3) துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சாம்சங் கல்ஃப் எலக்ட்ரானிக்ஸ் உடனான தனது கூட்டாண்மையை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த சேவையானது துபாயில் சாம்சங் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சேவையை சாம்சங் மொபைல் பயனர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து கீழே காணலாம்.

சாம்சங் வாலட்டில் உங்கள் உரிமம், கார் பதிவை எவ்வாறு சேர்ப்பது?

  1. முதலில் செய்ய வேண்டியது ப்ளே ஸ்டோருக்குச் சென்று ‘RTA Dubai’ செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடம் இன்னும் அப்ளிகேஷன் இல்லையென்றால், அதன் லேட்டஸ்ட் வெர்சனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
  2. பின் ‘RTA Dubai’ அப்ளிகேஷனைத் திறந்து, UAE PASS அக்கவுண்ட் அல்லது RTA அக்கவுண்ட்டை பயன்படுத்தி உள்நுழையவும்.
  3. அதன் பின்னர் ‘My docs’ பிரிவில் சென்றால், இது ட்ராஃபிக் கோப்பின் (traffic file) கீழ் ஓட்டுநர் உரிமம் மற்றும் கார் பதிவு அட்டைகளைக் (vehicle registration cards) காண்பிக்கும்.
  4. அதில் டிரைவிங் லைசென்ஸ் அல்லது வாகனப் பதிவின் கீழ், ‘Add to Samsung Wallet’ என்ற விருப்பத்தைக் காணலாம்.
  5. அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் சாம்சங் வாலட்டில் ஆவணத்தைச் சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதை அப்ளிகேஷன் உறுதிப்படுத்த கேட்கும்.

RTA இன் ஸ்மார்ட் சர்வீசஸ் இயக்குனர் மீரா அல் ஷேக் கூறுகையில், “அனைத்து தரவுகளும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையின் மிக உயர்ந்த தரத்துடன் பராமரிக்கப்படுகின்றன, பயனர் நம்பிக்கையைப் பாதுகாப்பதில் RTA மற்றும் சாம்சங் ஆகிய இரண்டின் அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று உறுதியளித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு அக்டோபரில், துபாய் மெட்ரோ அல்லது துபாயில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் சாம்சங் பயனர்களுக்கு டிஜிட்டல் nolpay -யினை RTA அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் போக்குவரத்திற்கான கட்டணம் செலுத்த அவர்கள் தங்கள் ஸ்மார்ட் போன் அல்லது ஸ்மார்ட்வாட்சை உபயோகித்தால் போதுமானதாகும். அதேபோல் குறிப்பிட்ட சில்லறை விற்பனை கடைகள், மளிகை பொருட்கள், பொது பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பலவற்றிலும் டிஜிட்டல் நோல் கார்டைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT