அமீரக செய்திகள்

அமீரகத்தில் வெளிநாட்டவர்கள் எத்தனை வயது வரை வேலை பார்க்கலாம்.? சட்டம் சொல்வது என்ன.?

உலகின் பல நாடுகளை சேரந்தவர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இங்கே பணிபுரிந்து விட்டு பின்னர் சொந்த நாடுகளுக்கு திரும்பி விடுவது வழக்கம். அதேசமயம் மற்றவர்கள் 50 வயதை கடந்த பின்பும் இங்கே தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், வெளிநாட்டவர்கள் அமீரகத்தில் குறிப்பிட்ட ஆண்டு காலம் வரை மட்டுமே இங்கே பணிபுரிய முடியும். அது பற்றி அமீரக தொழிலாளர் மற்றும் வேலைவாயப்புச் சட்டம் என்ன கூறுகிறது என்பது பற்றிய விளக்கங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். அமீரகத்தை பொருத்தவரை வேலைவாய்ப்பு உறவுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பிற அமைச்சகத் தீர்மானங்கள் போன்ற நிகழ்வுகளில் 1980 ஆம் ஆண்டின் ஃபெடரல் சட்டம் எண் 8 ஆனது  பின்பற்றப்படுகிறது.

தற்போதைய வேலை வாய்ப்புச் சட்டத்தின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீ்ரகத்தில் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டு ஊழியர்களைச் சேர்ப்பது தொடர்பான தொழிலாளர் அனுமதிப் பிரிவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்த 1989 இன் அமைச்சரவை தீர்மானம் எண் 52, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் ஓய்வு வயது 60 என்று குறிப்பிடுகிறது.

அதாவது, “அமீரகத்தில் பணியமர்த்தப்பட்ட பணியாளர் 60 வயதிற்கு மேல் இருக்கும் பட்சத்தில், எமிராட்டி அல்லாத வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை வழங்குவதற்கான விண்ணப்பங்களின் ஒப்புதல் வழங்கப்படாது. ஆயினும், நிபுணத்துவத் துறையில் பணியாளருக்கு விரிவான மற்றும் அரிதான அனுபவம் இருந்தால், அதிகபட்ச வயது வரம்பு தள்ளுபடி செய்யப்படலாம்” என தீர்மானம் கூறுகிறது.

அதன்படி, மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) 60 முதல் 65 வயது வரையிலான தனிநபர்களிடமிருந்து பணி அனுமதிக்கான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அதன்மூலம் ஓய்வூதிய வயதை 60லிருந்து 65 ஆக உயர்த்துகிறது. இதன் அடிப்படையில் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயது அதிகபட்சம் 65 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

இருப்பினும், அமீரகத்தின் பொருளாதாரம் மற்றும் அத்தகைய பணியாளர் பணியமர்த்தப்பட்ட நிறுவனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த தனிநபரின் பணியின் தன்மை, அவரது நற்சான்றிதழ்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே ஓய்வு பெறுவதற்கான வயது 65 ஆக மேலும் அதிகரிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய சட்ட விதிகளின் அடிப்படையில், உங்களின் தற்போதைய நிறுவனத்தில் நீங்கள் ஓய்வு பெற்றவுடன், உங்களின் பணி அனுபவம் மற்றும் திறன்களின் அடிப்படையில் UAE யில் உள்ள ஒரு நிறுவனத்தால் பணி அனுமதி வழங்கப்பட்டால், நீங்கள் அமீரகத்தில் தொடர்ந்து பணியாற்றலாம். எனினும், உங்கள் வருங்கால முதலாளியால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் உங்களுக்கு பணி அனுமதி வழங்குவது MoHRE இன் விருப்பத்திற்கு உட்பட்டது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!