துபாய்: சாலையின் ஓரங்களில் முந்திச் சென்றவர்களுக்கு 1,000 திர்ஹம்ஸ் அபராதம்.. வீடியோ வெளியிட்டு எச்சரிக்கும் துபாய் போலீஸ்..!!
துபாயில் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றனர். விதிமீறல் புரிபவர்களுக்கு அபராதம் மற்றும் ப்ளாக் பாய்ண்ட்ஸ் விதிக்கப்படுவதுண்டு. இருந்தபோதிலும் ஒரு சில வாகன ஓட்டிகள் விதிகளை பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றாற் போல் வாகனம் ஓட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில் road shoulder என்று சொல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டையும் தாண்டியுள்ள அவசர பாதையில் தங்கள் வாகனங்களை ஓட்டிய பல வாகன ஓட்டிகளுக்கு சமீபத்தில் தலா 1,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் துபாய் போலீசார், விதிகளை மீறுபவர்களின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
போக்குவரத்து விதிகளை பொறுத்தவரை மேற்கூறியவாறு சாலை விளிம்பில் செல்வது விதிமீறலாகும். இந்த விதியினை பின்பற்றாமல் சென்றால் ஆறு ப்ளாக் பாய்ண்ட்ஸூம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Dubai Police have issued fines to a group of motorists found overtaking on the hard shoulder, urging everyone to adhere to traffic safety guidelines and regulations.#RoadSafety #SummerWithoutAccidents pic.twitter.com/8e1T4No3Rq
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) August 18, 2024
மேலும் இப்பகுதியானது அவசரகால பயன்பாட்டிற்கு மட்டுமே ஆகும். அதாவது கார் நிறுத்தப்பட்டால் அல்லது விபத்தில் சேதமடைதல் போன்ற காரணங்களுக்காக வாகன ஓட்டிகள் இப்பகுதியில் வாகனங்களை செலுத்தலாம். அதே நேரத்தில் இப்பகுதியை போக்குவரத்தில் முந்திச் செல்லவோ அல்லது போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கவோ பயன்படுத்த அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel