ஆகஸ்ட் 4 முதல் மஸ்கட் ஏர்போர்ட்டின் போர்டிங் விதிகளில் மாற்றம்.. மீறும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும்.. விமான நிறுவனம் அறிக்கை..!!
ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள் தங்களின் லக்கேஜ் நடைமுறைகளை முடிப்பதற்கான ‘பயணிகள் போர்டிங் சிஸ்டம்’ (PBS) விதிகளை புதுப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதுப்பிக்கப்பட்ட விதிகளானது நாளை (ஆகஸ்ட் 4) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி பயணிகள் இப்போது மஸ்கட் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு, குறைந்தது 40 நிமிடங்களுக்கு முன்பு மின்னணு போர்டிங் கேட்களில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வரும் பயணிகளுக்கு நுழைவாயில் அணுகல் தடைசெய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் விமானம் புறப்படுவதற்கு முன்பான செக்-இன் முடியும் நேரம் எப்போதும் மாறாமல் 60 நிமிடங்களாக இருக்கும் என்றும், ஆகஸ்ட் 4 முதல் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டிற்கு முன் உங்கள் போர்டிங் பாஸைக் காண்பிக்கும் பகுதி புதிய இயக்க நேரத்தைக் கொண்டிருக்கும் எனவும் விமான பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மஸ்கட் விமான நிலையம் வரும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் பாதுகாப்பு சோதனைகளை விரைவுபடுத்தவும், சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கு சரியான நேரத்தில் போர்டிங் கேட்களை வந்தடைவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மஸ்கட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஓமான் ஏர் விமான நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “அன்புள்ள விருந்தினர்களே, ஆகஸ்ட் 4 முதல், மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் போர்டிங் சிஸ்டத்தில் (PPS) புதுப்பிப்புகள் இருப்பதால், உங்கள் விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 40 நிமிடங்களுக்கு முன்னதாக மின்னணு போர்டிங் கேட்களை வந்தடையவும். அதன் பிறகு வாயில்களுக்கான அணுகல் தடைசெய்யப்படும். உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி” என ஓமான் ஏர் விமான நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel