ADVERTISEMENT

அமீரக தேசிய தினத்திற்கு 53GB இலவச டேட்டாவை அறிவித்துள்ள ‘du’.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..??

Published: 28 Nov 2024, 2:46 PM |
Updated: 28 Nov 2024, 2:58 PM |
Posted By: admin

53வது ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகத்தின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றான டு (du) இலவச டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அந்நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அது மட்டுமின்றி இந்த டிஜிட்டல் சேவை வழங்குநர் இன்று (நவம்பர் 28) முதல் டிசம்பர் 4 வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பல பிரத்யேக சலுகைகள் மற்றும் ப்ரொமோஷன்களையும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புகளின் படி அனைத்து போஸ்ட்பெய்டு (postpaid) வாடிக்கையாளர்களும் ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும் 53GB தேசிய தரவை இலவசமாகப் பெற முடியும் என்றும் இந்தச் சலுகை 4 டிசம்பர் 2024 வரை மட்டுமே கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் ப்ரீபெய்டு ஃப்ளெக்ஸி (prepaid flexi) வருடாந்திர திட்டங்களை வாங்கிய அல்லது இந்த திட்டத்திற்கு மாறிய வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் 53GB தேசிய தரவை இலவசமாகப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சலுகை 31 டிசம்பர் 2024 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT