ADVERTISEMENT

துபாய் ஏர்ஷோவில் இந்திய போர் விமான விபத்து.. விமானி உயிரிழப்பை உறுதி செய்த அரசு..

Published: 21 Nov 2025, 3:40 PM |
Updated: 21 Nov 2025, 4:07 PM |
Posted By: admin

துபாய் ஏர்ஷோவில் கலந்து கொண்ட இந்திய போர் விமானம் ஒன்று இன்று டெமோவிற்காக பறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்திய தேஜாஸ் போர் விமானம், நவம்பர் 21 (வெள்ளிக்கிழமை) அன்று துபாய் விமான கண்காட்சியின் இறுதி பிற்பகல் டெமோவின் போது விபத்துக்குள்ளாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது அப்பகுதி முழுவதும் நெருப்பும் புகையும் பரவியதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த தீ விபத்தை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாய் விமானக் கண்காட்சியில் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்ததை துபாய் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்றைய துபாய் விமானக் கண்காட்சியின் போது இந்தியாவைச் சேர்ந்த தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்ததாக அந்தப் பதிவு கூறுகிறது. அத்துடன் அவசர மற்றும் தீயணைப்புக் குழுக்கள் உடனடியாகச் செயல்பட்டு, சம்பவ இடத்தில் நிலைமையைக் கையாண்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த விபத்துக்கு பிறகு பார்வையாளர்கள் கண்காட்சிப் பகுதிக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

துபாய் விமான கண்காட்சி உலகின் மிகப்பெரிய விமான கண்காட்சிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு, இது நவம்பர் 17 அன்று தொடங்கியது, இது நவம்பர் 21 வரை நடைபெறும். விமானப் போக்குவரத்து தொடர்பான அனைத்து விஷயங்களையும் காட்சிப்படுத்த 1,500 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஒன்று கூடியுள்ளனர். இந்த நிலையில் தற்பொழுதுள்ள ஏற்பட்டுள்ள விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT