அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் இந்தியாவை சேர்ந்த 40 வயதான சனில் குமார் என்பவர் இரண்டாவது முறையாக வென்றிருக்கிறார். இதன் மூலம், பிக் டிக்கெட் டிராவில் அவர் 100,000 திர்ஹம்ஸை இரண்டாவது முறையாக பெற்றிருக்கிறார்.
15 ஆண்டுகளாக தனது குடும்பத்தினருடன் நீண்ட காலமாக துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு வாராந்திர இ-டிராவில் அதே 100,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசைப் பெற்று முதல் முறையாக அதிர்ஷ்டசாலியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இப்போது, மீண்டும் ஒரு முறை வென்றிருப்பது அவரை இரட்டை வெற்றியாளராக ஆக்கியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பிக் டிக்கெட் டிக்கெட்டுகளை வாங்கி வரும் சனிலின் சமீபத்திய வெற்றி அவரது 10 நண்பர்கள் குழுவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தெரிவிக்கையில் “வெற்றி அழைப்பைப் பெற்றபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அத்துடன் தொடர்ந்து விளையாடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.