ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசாங்க மனிதவளங்களுக்கான கூட்டாட்சி ஆணையம், 2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விடுமுறையை மத்திய அரசுக்கு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டின் முதல் பொது விடுமுறை வியாழக்கிழமை, ஜனவரி 1, 2026 அன்று இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை, ஜனவரி 2, 2026, கூட்டாட்சி அரசு ஊழியர்களுக்கு தொலைதூர வேலையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருந்து கட்டாயம் பணிபுரியக்கூடிய சூழல் உள்ள ஊழியர்களை தவிர மற்றவர்கள் தொலைதூர முறையில் பணிபுரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுமுறை உறுதியானது என்றாலும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel