துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) செல்லும் மற்றும் வரும் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சனிக்கிழமை டெர்மினல் 1-க்கு வழிவகுக்கும் வகையில் பால விரிவாக்கத்தைத் திறப்பதாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தில் போக்குவரத்துப் பாதைகளின் எண்ணிக்கையை மூன்றில் இருந்து நான்காக உயர்த்துவதும், பாலத்தின் திறனை மணிக்கு 4,200 வாகனங்களிலிருந்து மணிக்கு 5,600 வாகனங்களாக உயர்த்துவதும் அடங்கும் என்றும், இது 33 சதவீத முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில், “இந்த விரிவாக்கம் விமான நிலைய டெர்மினலுக்கு போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும், பயண நேரத்தைக் குறைக்கும் மற்றும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது” என்று RTA குறிப்பிட்டது.