ADVERTISEMENT

துபாய்-மதுரை இடையே ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நேரத்தில் மாற்றம்.!! பயணிகளின் கவனத்திற்கு.!!

Published: 5 Jan 2026, 8:26 PM |
Updated: 6 Jan 2026, 9:12 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களில் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பிற மாவட்ட பகுதிகளை சார்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல மதுரை விமான நிலையத்தையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு மதுரை மற்றும் துபாய் இடையே பயணிக்கும் பயணிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் விமான சேவையே முக்கிய தேர்வாக இருக்கின்றது.

ADVERTISEMENT

பல வருடங்களுக்கும் மேலாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்த இரு விமான நிலையங்களுக்கு இடையே தொடர்ந்து நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. ஆயினும் இந்த விமான சேவையின் புறப்படும் நேரமானது அவ்வப்போது மாற்றப்பட்டு புதிய நேரங்கள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் ஜனவரி 05 முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு, துபாயில் இருந்து மதுரைக்கு செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானங்களின் நேரங்கள் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக துபாயில் டிராவல் நிறுவனம் நடத்திவரும் SKV ஷேக் (Travel Zone International Tourism) தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதன்படி, மதுரை to துபாய் செல்லும் ஸபைஸ் ஜெட் விமானத்தின் முந்தைய நேரம் 12.10 PM ஆனது தற்போது காலை 8.50 AM ஆக மாற்றப்பட்டுள்ளது. இது துபாய்க்கு காலை 11.25 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துபாய் to மதுரை செல்லும் விமானத்தின் முந்தைய நேரம் அதிகாலை 5.00 மணியில் இருந்து நள்ளிரவு 1.55 AM ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த விமானம் காலை 7.40 மணிக்கு மதுரையை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

எனவே, துபாய் மற்றும் மதுரை இடையே பயணிக்கவிருக்கும் பயணிகளுக்கு, ஏற்கனவே டிக்கெட் வழங்கப்பட்டிருந்தால், தயவு செய்து விமான நேரத்தை மீண்டும் சரிபார்த்துக் கொள்ளுமாறு பயண ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel