அமீரக செய்திகள்

துபாய், ஷார்ஜாவில் ஈத் அல் அதா பெருநாள் தொழுகை நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஈத் அல் அதா பெருநாளானது, நாளை மறுநாள் ஜூன் 28 ம் தேதி புதன்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், ஈத் அல் அதா நாளில் நடத்தப்படும் சிறப்பு தொழுகைக்கான நேரத்தை துபாய் மற்றும் ஷார்ஜா எமிரேட்கள் வெளியிட்டுள்ளன.

இந்த பெருநாள் தொழுகையானது அமீரகத்தில் உள்ள மசூதிகள் மற்றும் ஈத் முசல்லாக்கள் என்று அழைக்கப்படும் பெரிய திறந்தவெளி மைதானங்களில் நடத்தப்படும். மேலும் இந்த சிறப்பு தொழுகையானது சூரிய உதயத்திற்குப் பிறகு அதிகாலை நேரத்திலேயே நாடு முழுவதும் நடைபெறும்.

துபாய் மற்றும் ஷார்ஜாவில் பெறுநாள் தொழுகை நடைபெறும் நேரங்களின் விபரம்:

  • துபாய்: காலை 5.50 மணி
  • ஷார்ஜா: காலை 5.47 மணி 

எனினும், இந்த சிறப்பு தொழுகையானது பொதுவாக சூரிய உதயத்திலிருந்து 20 நிமிடம் கழித்து நடத்தப்படும் என்பதால், அதனடிப்படையில் மற்ற எமிரேட்களி்ல் தொழுகை நடைபெறும் நேரங்களின் உத்தேச பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • அபுதாபி: காலை 5.53 மணி
  • அஜ்மான்: காலை 5.47 மணி
  • உம் அல் குவைன்: காலை 5.46 மணி
  • புஜைரா: காலை 5.44 மணி
  • ராஸ் அல் கைமா: காலை 5.44 மணி

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை, ஈத் அல் அதாவை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரபா தினமான நாளை ஜூன் 27, செவ்வாய்கிழமை முதல் ஜூன் 30, வெள்ளிக்கிழமை வரை, பொது மற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமை வார விடுமுறையை பெறும் அமீரக குடியிருப்பாளர்கள் இவற்றையும் சேர்த்து மொத்தம் ஆறு நாள் நீண்ட தொடர் விடுமுறையை அனுபவிக்க உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!