ஷார்ஜாவில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம்!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் கடந்த வியாழக்கிழமை அன்று, அல் மஜாஸ்-3 இல், சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தி தனது முதல் ஸ்மார்ட் பே-அண்ட் பார்க் (Smart Pay and Park) திட்டத்தை ஷார்ஜா நகராட்சி தொடங்கியுள்ளது.
ஷார்ஜா நகராட்சியின் பொது இயக்குனர் தபேத் சலீம் அல் தாரிஃபி அவர்கள் “இத்திட்டம் வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தும் வகையில் பல்வேறு முறைகளை வழங்குகின்றது. வாகன ஓட்டுனர்கள் தங்கள் கட்டணங்களை தினமும் அல்லது வாராந்திர அல்லது மாதாந்திர முறையாகவோ அல்லது வாகனம் நிறுத்தும் இடத்திலோ செலுத்திக் கொள்ளலாம்” என்று கூறினார்.
பார்க்கிங் கட்டணமாக 5 திர்ஹம்ஸ் ஒரு மணி நேரத்திற்கும், 40 திர்ஹம்ஸ் ஒரு நாளுக்கும், 100 திர்ஹம்ஸ் ஒரு வாரத்திற்கும், 350 திர்ஹம்ஸ் ஒரு மாதத்திற்கும் மற்றும் 3500 திர்ஹம்ஸ் ஒரு வருடத்திற்கும் வசூலிக்கப்படும்.
View this post on Instagram
வாகன நிறுத்துமிடத்தில், ஒரு கேமரா வாகன எண்ணை(number plate) சரிபார்த்து தானாகவே கேட்டை திறக்கிறது. வெளியே செல்லும் போது, கேட் மீண்டும் திறந்து வாடிக்கையாளருக்கு ஓட்டுநர் சந்தாதாரர் இல்லையெனில் அவர்கள் பார்கிங்கில் நிறுத்திய நேரங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ற கட்டணத்தொகையை தெரிவிக்கின்றது. பழைய முறையில் கட்டணம் செலுத்த விரும்புவோர் ஆபரேட்டர் வழியாகவும் அல்லது பார்க்கிங் ஏரியாவில் நிறுவப்பட்டிருக்கும் சாதனம் மூலமும் செலுத்தலாம். மேலும், ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலமாகவும் நாம் பணம் செலுத்தலாம்.
பொது பார்க்கிங் துறையின் இயக்குனர் அலி அகமது அபு காசின் அவர்கள் மனிதர்களின் தலையீடு இல்லாமல் இந்த திட்டத்தை இயக்க முடியும் என்றும், வாகன எண்ணைப் படிக்க கண்காணிப்பு கேமராக்களும் மற்றும் பிற கேமராக்களும் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜா நகராட்சியில் வாடிக்கையாளர் சேவைத் துறையின் உதவி இயக்குநர் ஜெனரல் காலித் பின் ஃபலாஹ் அல் சுவைதி விளக்குகையில், அனைத்து நேரங்களிலும் பொதுமக்களுக்கு பார்க்கிங் வழங்குவதில் நகராட்சி ஆர்வமாக உள்ளது என்று கூறினார். தனியார் பார்க்கிங் மற்றும் கட்டண மற்றும் பார்க்கிங் இடங்களின் எண்ணிக்கை சுமார் 40,000 இடங்களை எட்டியுள்ளது. சுமார் 300 பே அண்ட் பார்க்(Pay and Park) இடங்கள் 19,000 வாகன நிறுத்துமிடங்களை குத்தகைக்கு வழங்குகின்றன.
எதிர்காலத்தில் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள், மின்சார கார்களை சார்ஜ் செய்வதற்கான சிறப்பு இடம், ஏடிஎம் மற்றும் ஸ்மார்ட் ஆப் மற்றும் ஸ்மார்ட் ஆய்வு முறை மூலம் பார்க்கிங் முன்பதிவு அமைப்பு ஆகியவற்றை வழங்கும் அளவிற்கு ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்படும் என்று அபு காசின் கூறினார்.