அமீரக செய்திகள்

அமீரகத்தில் இருந்து இந்தியா பயணிக்கும் நபர்களுக்கு பயணத்திற்கு முந்தைய PCR சோதனையில் இருந்து விலக்கு..!! யாருக்கு..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், இந்தியாவிற்கு செல்வதற்கு முன் இனி கொரோனாவிற்கான PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே பயணத்திற்கு முந்தைய PCR சோதனை விலக்கு பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா அங்கீகரிக்கும் தடுப்பூசி சான்றிதழ் நாடுகள்/பிராந்தியங்களின் பட்டியலில் அமீரகம் சேர்க்கப்பட்டதன் விளைவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்பவர்கள் ஏர் சுவிதா போர்ட்டலில் தடுப்பூசி சான்றிதழை பதிவேற்ற வேண்டும். தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலிலிருந்து வழங்கப்பட்ட சான்றிதழ் இல்லாத பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட PCR பரிசோதனையை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் PCR சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதேபோல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு அமீரகத்திற்கு பயணிப்பதற்கு முன் PCR சோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Articles

Back to top button
error: Content is protected !!