கொரோனா வைரஸ் : ஃபேஸ் மாஸ்க் அணிய வேண்டாம்!! அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் எச்சரிக்கை!!
கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில் மக்களிடையே முகமூடி (Face Mask) அணியும் பழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. மற்றவர்களிடமிருந்து நோய்த்தொற்று ஏற்படாமலிருக்க மக்கள் இதை அணிந்து வருகிறார்கள்.
ஆனால் தற்சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (The Ministry of Health and Prevention) மக்கள், இந்த ஃபேஸ் மாஸ்க் (Face Mask) அணிய வேண்டாம் என்று கூறியுள்ளது.
சுவாச மண்டலத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி எதிர்கால சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் N-95 ஃபேஸ் மாஸ்க்கை அணிய வேண்டாம் என்று சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கு சனிக்கிழமை அறிவுறுத்தியது.
மேலும் இந்த ஃபேஸ் மாஸ்க்கை குழந்தைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
“N-95 மருத்துவ முகமூடி” பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் இடங்களில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களுக்கு மட்டுமே அணியும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
N-95 முகமூடிகள் பொதுவான அறுவை சிகிச்சை முகமூடிகளைக் காட்டிலும் நெருக்கமான முகப் பொருத்தம் மற்றும் அதிக வடிகட்டும் தன்மையைக் கொண்டுள்ளன. இதனால் அவை குறைந்தது 95 சதவீத துகள்களை வெளியே வைத்திருக்க உதவுகின்றன.
பரவும் கொரோனா வைரஸின் பயத்தால், நோய்வாய்ப்படாத பெரும்பாலான மக்கள் அவற்றை அணியத் தேவையில்லை என்பதற்கான சான்றுகள் இருந்தபோதிலும், முகமூடிகளின் (Face Mask) விற்பனை உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளது.