துபாயில் பார்க்கிங் கட்டணம் ரத்து..!!! RTA அறிவிப்பு..!!! வாகன ஓட்டிகள் நிம்மதி..!!!
துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாயில் சாலையோரங்களில் இருக்கக்கூடிய கார் பார்க்கிங் மற்றும் மல்டி ஸ்டோரி பார்க்கிங் ஆகிய அனைத்திற்கும் நாளை, மார்ச் 31, 2020 செவ்வாய் முதல் ஏப்ரல் 13, 2020 வரை, இரண்டு வாரங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.
. @rta_dubai announces that paid and multi storey parking in Dubai will be free of charge for two weeks from tomorrow Tuesday 31 March up to Monday 13 April 2020. #Dubai
— Dubai Media Office (@DXBMediaOffice) March 30, 2020
இது கொரோனா வைரசிற்கான தடுப்பு நடவடிக்கைகள் (Precaution Measures), சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) மற்றும் உள்துறை அமைச்சகத்தின் (MOI) மூலமாக நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படும் தேசிய சுத்திகரிப்பு திட்டம் (National Sterilization Campaign) ஆகியவற்றின் காரணத்தையொட்டி பொதுமக்களை ஆதரிக்கும் வண்ணம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது அரசாங்கத்தின் தொலைதூர வேலை முயற்சி (Remote Working System) மற்றும் பொதுமக்களை வீட்டிலேயே இருக்க வேண்டும் (Stay Home) என்ற அரசின் கட்டளையை பொதுமக்கள் கடைபிடிக்க ஏதுவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.