அமீரக செய்திகள்

அமீரகத்தில் அதிகரிக்கும் வெப்பம்.. வெளியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தண்ணீர், பழச்சாறுகள் வழங்கிய அபுதாபி முனிசிபாலிட்டி..!

அமீரகத்தில் வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களின் வெப்பத்தைத் தணிக்க அவர்களுக்கு குளிர்ந்த நீர் மற்றும் பழச்சாறுகளை அபுதாபி முனிசிபாலிட்டி அதிகாரம் விநியோகித்தனர்.

இது குறித்து அபுதாபி முனிசிபாலிட்டி அதிகாரிகள், கோடை காலத்தில் வெளியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான பிரச்சாரத்தில், குளிர்ந்த நீர், பழச்சாறுகள் மற்றும் பேரீச்சம்பழம் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். ஜூலை நடுப்பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பிரச்சாரம் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை நடைபெறும் என்றும் சமூக ஒற்றுமையும், ஒத்துழைப்பின் மதிப்புகளையும், சமூகத்தின் உறுப்பினர்களிடையே இரக்கத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த பிரச்சாரம் தொழிலாளர்களின் மதிப்புகளையும், அர்ப்பணிகளையும் உணர்ந்து ஒத்துழைப்பு மற்றும் நெருக்கத்தின் உணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, கொடுப்பதன் மூலம் அர்த்தங்களும் ஒற்றுமையும் மற்றும் சமூக மதிப்புகளும் ஒன்றினைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!