அமீரகத்தில் 20 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை தட்டிச்சென்ற இந்தியர்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் (Big Ticket raffle draw) ராஸ்-அல் கைமாவில் இருக்கும் இந்தியர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் அபுதாபியில் நடைபெறும் பிக் டிக்கெட் டிராவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும், உயர் ரக வாகனங்களும் பரிசாக வழங்கப்படும். தற்பொழுது இந்த மாதத்திற்கான பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவானது (Big Ticket raffle draw) இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த ஜிஜேஷ் கோரோதன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 20 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையானது கிடைத்துள்ளது.
இந்த பிக் டிக்கெட் டிராவின் முதல் பரிசை வென்ற வெற்றியாளர் கோரோதன் “நான் என் மனைவி மற்றும் மகளுடன் டிராவை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தேன். இதை எனது இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்” என்று கூறியுள்ளார். மேலும், பரிசுத்தொகைக்கான டிக்கெட்டை மார்ச் 19 அன்று வாங்கியதாகவும், ஆறு மாதங்களாக தொடர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவரை அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த வெற்றியாளர்களும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக வந்த ரகு பிரசாத் என்ற நபர் 100,000 திர்ஹம் பரிசுத்தொகையும், மூன்றாவதாக வந்த அனிஷ் தம்பி என்ற நபர் 50,000 திர்ஹம் பரிசுத்தொகையும் வென்றுள்ளனர்.
Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal
தற்பொழுது, இந்த மாதத்திற்கான டிக்கெட்டானது, பிக் டிக்கெட் 10 மில்லியன் தொடர் 215 -ல் (Big 10 million series 215) கிடைக்கிறது. 10 மில்லியன் பரிசுத்தொகைக்கான அடுத்த டிரா மே 3 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.