அமீரக செய்திகள்

வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க புதிய APP அறிமுகம்..!!! அபுதாபி சுகாதாரத்துறை அறிவிப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நபர்களை வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் (Self Quarantine) சிறிது காலம் இருக்குமாறு கூறி வருகிறார்கள். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலின் போது கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கின்றனரா என்பதை உறுதி செய்ய, அபுதாபி சுகாதாரத்துறை “Stay Home” என்ற ஒரு புதிய அப்ளிகேஷனை (App) அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக அபுதாபி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட காலங்களில் மற்ற நபர்களுடன் கலக்காமல், மற்றவர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்களா என உறுதி செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளது.

“Stay Home” அப்ளிகேஷனானது, கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவர்களின் இருப்பிடத்தைத் தீர்மானிக்கவும், அவர்கள் தனிமைப்படுத்தலின் நிபந்தனைகளை, அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் நலன்களுக்காக மீறப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் இது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal

“வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்டு கொள்ளப்படும் ஒவ்வொரு நபரும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த அந்தந்த நபர்களுக்கு உரிய பயன்பாட்டாளர் பெயர் (username) மற்றும் கடவுச்சொல் (password) தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள்ளேயே இருக்குமாறு இந்த அப்ளிகேஷன் அந்தந்த நபர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும்” என்று அபுதாபி ஊடக அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!