அமீரக செய்திகள்

UAE: துபாய் – அபுதாபி இடையேயான இன்டெர்சிட்டி பேருந்து சேவையை மீண்டும் துவங்கிய RTA..!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நேற்று முதல் துபாய் மற்றும் அபுதாபி இடையே E102 பேருந்து சேவையை மீண்டும் தொடங்கியது. நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவை துபாயில் உள்ள Ibn Battuta பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி Musaffah பேருந்து நிலையத்திற்கு செல்கிறது. கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து நகரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதால் நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை அதிகரிக்க மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் RTA மற்ற வழித்தடங்களில் செல்லும் பேருந்து சேவைகளையும் நீடித்துள்ளது: 24 சர்வதேச நகர பேருந்து நிலையத்திற்கு 44 ஜடாப் வழியாக செல்லும் பேருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது, 88வது வழித்தடத்தில் துபாய் இன்டர்நெட் சிட்டிக்கு செல்லும் பேருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது, C04 ஜடாஃப் வழியில் செல்லும் பேருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது, அல் தவார் வழியாக F08 பாதையில் செல்லும் பேருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது, துபாய் இன்டர்நெட் சிட்டிக்கு செல்லும் F56 வழி பேருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது நீட்டிக்கப்பட்ட பேருந்து மாற்றங்கள் நிர்ணயிக்கப்பட்ட வழியில் மட்டுமே செல்லும். பேருந்துகளில் பயணம் செய்வது செலவு குறைந்ததாகும். பயணிகள் நகரின் அழகை ரசித்து மன அழுத்தம் இல்லாத நிதானமான சூழலில் பயணிக்க முடியும். RTA-வின் அதிநவீன பேருந்துகள் வலிமை, வசதியான மற்றும் பாதுகாப்பானவை ஆகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!