துபாய் : JBR பீச், அல் மம்சார் பீச், ஜூமைரா பீச் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறப்பு..!! துபாய் முனிசிபாலிடி அறிவிப்பு..!!
கொரோனாவின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவந்த இயக்க கட்டுப்பாடுகள், பொது இடங்கள் மீதான தடை, பொது போக்குவரத்து மீதான தடை என அனைத்தும் படிப்படியாக விளக்கிக்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக துபாயில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளும் ஈத் விடுமுறைக்கு பிறகு ஒன்றன்பின் ஒன்றாக தளர்த்தப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை முதல் (மே 29) துபாயில் இருக்க கூடிய முக்கிய கடற்கரைகளான JBR பீச், அல் மம்சார் பீச், ஜூமைரா பீச் மற்றும் உம் சுகைம் பீச் ஆகியவைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை துபாய் முனிசிபாலிட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து கடந்த சில மாதங்களாக இந்த அனைத்து கடற்கரைகளும் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், கடற்கரைக்கு செல்லும் அனைத்து பொதுமக்களும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் எனவும் துபாய் முனிசிபாலிடி அறிவித்துள்ளது.
.@DMunicipality announces the reopening of JBR beach, Al Mamzar, Jumeirah and Umm Suqeim beaches from tomorrow, Friday May 29, and asks all to adhere to the public safety measures and guidelines to ensure the health & safety of all. #We_Are_All_Responsible pic.twitter.com/bgKRHResmf
— Dubai Media Office (@DXBMediaOffice) May 28, 2020