UAE கொரோனா அப்டேட் (மே 25, 2020)..!! பாதிக்கப்பட்டோர் 822 பேர்..!! 3 பேர் உயிரிழப்பு..!! மொத்த எண்ணிக்கை 30,307 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (திங்கள்கிழமை, மே 25,2020) புதிதாக 822 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 30,307 ஆக உயர்ந்துள்ளது.
The latest update of #Coronavirus (#COVID19) in the #UAE#We_Are_All_Responsible#YouAreResponsible pic.twitter.com/7ejrcWxFhr
— هيئة الصحة بدبي (@DHA_Dubai) May 25, 2020
புதிதாக 3 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார் என்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (MoHAP) சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 601 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 15,657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal