துபாயிலிருந்து இன்று சென்னை செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் பயண நேரம் மாற்றியமைப்பு..!! இந்திய துணைத்தூதரகம் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் இரண்டாம் நாளான இன்று (மே 8) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை சார்ந்த இரண்டு விமானங்கள், அமீரகத்தில் தாயகம் திரும்ப விண்ணப்பித்தவர்களை ஏற்றி கொண்டு துபாயிலிருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
இந்த விமானங்களில் ஒன்று, இன்று மதியம் 2.45 மணிக்கு புறப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத்தூதரகத்தின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தின் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல கூடிய முதல் விமானம், இரவு 8 மணிக்கு புறப்படும் என்றும், இரண்டாவது விமானம் இரவு 9 மணிக்கு புறப்படும் என்றும் துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விமானங்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 நிலையத்திலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டது முன்கூட்டியே அறியப்படாத நிலையில், அபுதாபி, அஜ்மான், ஷார்ஜா போன்ற பல நகரங்களில் வசிப்பவர்களில், இன்று தாயகம் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த பயணிகளில் பலரும் காலை 10 மணிக்கே விமான நிலையம் வந்தடைந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe